Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG- சாம்பியன்ஸ் டிராபி வெல்லனும் கடவுளே.. Puri Jagannath கோயிலுக்கு சென்ற வாஷிங்டன், வருண்

மும்பை : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஒடிசாவில் கட்டாக் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும்.

இதனால் இங்கிலாந்தின் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்க வேண்டும் என்றால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இந்த சூழலில் முதல் ஒரு நாள் போட்டியில் பங்கேற்காத விராட் கோலி இரண்டாவது போட்டிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ind vs eng puri jagannath temple varun chakravarthy washington sundar

இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகநாத் கோயிலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் என்று பூரி ஜெகநாதர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். அப்போது அங்கு இருந்த ரசிகர்கள், இந்த மூன்று வீரர்களையும் சுற்றி நின்று திரண்டனர்.

இதை அடுத்து, சில நேரம் பரபரப்பு நிலவியது. போலீசார் மற்றும் கோவில் நிர்வாகிகள் மூன்று கிரிக்கெட் வீரர்களையும் பேட்டரி காரில் ஏற்றி கோவிலுக்குள் அழைத்து சென்றனர். எனினும் கிரிக்கெட் வீரர்களின் செல்போன்கள் பத்திரமாக வாங்கி வைக்கப்பட்டது. இதை அடுத்து மூன்று கிரிக்கெட் வீரர்களும் கோவிலில் வழிபாடு நடத்தி விட்டு பின்னர் கீழே இறங்கி வந்தனர்.

அப்போது கோவில் நிர்வாகிகள் சார்பாக மூன்று வீரர்களுக்கும் சிறப்பு துண்டு அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மூன்று வீரர்களும் கோவிலில் வழிபாடு நடத்தி இருக்கின்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள் பெரிய ஐசிசி தொடர் நடைபெறுவதற்கு முன்பு வீரர்கள் இது போல் கோவிலுக்கு செல்வது நல்ல விஷயம் என்றும் கடவுளின் உறுதுணை இருந்தால் தான் பெரிய தொடர்களில் வெற்றி பெற முடியும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Saturday, February 8, 2025, 14:57 [IST]
Other articles published on Feb 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+