Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: பேசாம சும்மா இருந்திருக்கலாம்.. ஹாரி புரூக்கை உசுப்பு ஏற்றிய தமிழக வீரர்.. வாங்கி கட்டி கொண்ட பின்னணி

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி பல திருப்புமுனைகளை சந்தித்து இருக்கின்றது. இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களம்பிறங்கியது.

இதன் மூலம் தொடரை இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் செய்து விடலாம் என்பது தான் திட்டமாக இருந்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் 265 ரன்கள் கடைசி இன்னிங்ஸில் எந்த அணியுமே வெற்றிகரமாக இலக்கை துரத்தியது கிடையாது.

Harry brook

ஆனால் இந்திய அணி 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்ததால் இந்தியா இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 98 பந்துகளில் 111 ரன்கள் குவித்து இருக்கின்றார். இதில் 14 பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.

ஹாரி புரூக் இந்த போட்டியில் அதிரடியாக ஆடியதற்கு அவரை உசுப்பேற்றும் வகையில் இந்திய வீரர்கள் நடந்து கொண்டதே காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பில்டிங் செய்து கொண்டிருந்தபோது அவரிடம் தேவையில்லாமல் இந்திய வீரர்கள் திட்டி இருப்பதாக தெரிகிறது.

குறிப்பாக தமிழக வீரர் சாய் சுதர்சன், இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ஆகியோர் ஹாரி புரூக் உடன் தகாத வார்த்தையில் திட்டி இருக்கின்றனர். இதனால் ஏற்பட்ட கோபத்தில் தான் ஹாரி புரூக் இந்தியாவை எப்படியும் வெற்றிபெற வைத்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் அதிரடி காட்டி இருக்கின்றார். இதை குறிப்பிட்டுள்ள ரசிகர்கள் இந்திய வீரர்கள் அமைதி காத்து களத்தில் நடந்து கொண்டிருந்தால், இந்நேரம் இந்த பிரச்சனையை சந்தித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

முன்பெல்லாம் இந்திய வீரர்கள் எந்த வெளிநாட்டு வீரர்களுடன் பிரச்சனைக்கு செல்ல மாட்டார்கள் என்றும் ஆனால் தற்போது வரும் புதுமுக வீரர்கள் அனைவருமே எதிரணியிடம் தேவை இல்லாமல் சண்டை போட்டு வாங்கி கட்டிக் கொள்கிறார்கள் என்று ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, August 3, 2025, 21:10 [IST]
Other articles published on Aug 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+