Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் மட்டும்தான் விளையாடுவாரா.. ரஞ்சியில் விளையாட என்ன பிரச்சனை? இஷான் கிஷன் மீது கடுப்பான பதான்!

மும்பை: ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடாமல் முழு உடல் தகுதியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இஷான் கிஷனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத், துருவ் ஜுரெல் மட்டுமே மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். மீண்டும் இஷான் கிஷன் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன்பாக மனசோர்வு காரணமாக இஷான் கிஷன் நாடு திரும்பினார்.

IND vs ENG : Irfan Pathan direct attack on Ishan Kishan for not playing the Ranji trophy cricket


இதனைத் தொடர்ந்து ரஞ்சி டிராபி போட்டிகளிலும் இஷான் கிஷன் விளையாடவில்லை. இதனிடையே 2வது டெஸ்ட் போட்டிக்கு பின் இஷான் கிஷன் குறித்து ராகுல் டிராவிட் பேசுகையில், இந்திய அணி நிர்வாகம் இஷான் கிஷனுடன் தொடர்ந்து பேசி வருகிறது. அவர் இந்திய அணிக்கு திரும்புவதற்கு முன் சில கிரிக்கெட் போட்டிகளிலாவது விளையாடி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். இதன் மூலம் மறைமுகமாக இஷான் கிஷன் ரஞ்சி போட்டிகளில் பங்கேற்க அறிவுறுத்தப்படுவதாக பார்க்கப்பட்டது.

இதனிடையே பாண்டியா சகோதரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இஷான் கிஷன், ரஞ்சி போட்டிகளில் விளையாடாமல் இருப்பது ஏன் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பேசுகையில், கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுவதற்கான உடல்தகுதியுடன் இருக்கும் ஒரு வீரர், ரஞ்சி போட்டிகளில் விளையாட முடியாமல் இருப்பது குழப்பமாக உள்ளது. இதற்கு என்ன அர்த்தம்? எப்படி புரிந்து கொள்வது? என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் சூழலில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா டி20 தொடர்களில் ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதே இஷான் கிஷன் கோபமடைய காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல் 14 மாதங்களாக டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த ரோகித் சர்மா திடீரென மீண்டும் டி20 கிரிக்கெட் பக்கம் திரும்பியதையும் இஷான் கிஷன் ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மும்பை அணி கேப்டன் விவகாரத்தில் ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா இருவருக்கும் மோதல் போக்கு இருக்கும் சூழலில், இஷான் கிஷன் பாண்டியா சகோதரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Sunday, February 11, 2024, 10:10 [IST]
Other articles published on Feb 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+