For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செல்ஃபோனை கூட எடுக்காத இஷான் கிஷன்.. ராகுல் டிராவிட் கூறுவது சரிதான்.. முன்னாள் வீரர் கொந்தளிப்பு!

மும்பை : இந்திய இளம் வீரர் இஷான் கிஷன் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியது சரி தான் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ரஞ்சி டிராபி தொடரின் 6வது போட்டியிலும் இஷான் கிஷன் களமிறங்கவில்லை. தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன் இஷான் கிஷன் மனசோர்வை காரணம் காட்டி விடுப்பு கோரிய நிலையில், அதன்பின் இஷான் கிஷனின் செயல்பாடுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை. இதனிடையே டி20 அணியில் ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கியதால், இஷான் கிஷன் கோபித்து கொண்டு நாடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

IND vs ENG : Ishan Kishan has not even picked the Mobile and told his availability says Aakash Chopra

அதேபோல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இஷான் கிஷன் தயார் என்று கூறினால் நிச்சயம் அவர் தேர்வு செய்யப்படுவார். ஆனால் அதற்கு முன் அவர் கிரிக்கெட் விளையாட வேண்டும். உள்ளூர் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று யாரும் அவரை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இந்திய அணிக்கு வருவதற்கு முன் அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது நல்லது என்று கூறியிருந்தார். முன்னதாக இஷான் கிஷன் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட பிசிசிஐ சார்பாக அறிவுறுத்தப்பட்டது.

ஜனவரி மாதம் தொடங்கிய இதுவரை இஷான் கிஷன் ஒரு ரஞ்சி போட்டியில் கூட விளையாடவில்லை. இதுகுறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், ராகுல் டிராவிய் சொல்வது சரி தான். அவர் முதல் தயார் என்று இந்திய தேர்வுக் குழுவுக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு முன் அவர் சில கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் ஓய்வில் இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் ரஞ்சி டிராபி தொடர் விறுவிறுப்பாக நடக்கும் போது ஓய்வில் இருக்கிறார். இதனால் அவர் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுவதன் மூலமாக இந்திய அணிக்கு தயாராக இருக்கிறேன் என்று உணர்த்த முடியும். ஆனால் இஷான் கிஷன் ஒதுவரை செல்ஃபோனை கூட எடுக்கவில்லை. யாரிடமும் விளையாட தயாராக இருக்கிறேன் என்றும் சொல்லவில்லை. இஷான் கிஷன் விவகாரத்தில் ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுத்தது பிரச்சனையில்லை என்று கருதுகிறேன்.

அவர் வெறும் வதந்தியாக இருக்க வேண்டும். நிச்சயம் இஷான் கிஷனை சஞ்சு சாம்சனுடன் ஒப்பிட போவதில்லை. ஏனென்றால் இஷான் கிஷன் தொடர்ச்சியாக இந்திய அணியுடன் இருந்துள்ளார். வாய்ப்பு வழங்கப்படாத போதும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதனால் அவர் விரக்தியில் இருப்பதாக நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, February 10, 2024, 8:56 [IST]
Other articles published on Feb 10, 2024
English summary
IND vs ENG : Ishan Kishan has not even picked the Mobile and told his availability says Aakash Chopra
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+