IND vs ENG: 2 ஓவரில் 50+ ரன்கள்.. ஆட்டத்தையே மாற்றிய ரவி பிஸ்னாய்.. இங்கிலாந்து அபார வெற்றி
மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 191 ரனிகளை இலக்காக கொண்டும் மோசமான பந்துவீச்சால் ஒரு ஓவர்கள் எஞ்சிய நிலையில் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி வரலாற்று சாதனை படைத்தார். சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை முறியடித்து, மிக இளம் வயதில் (15 ஆண்டுகள் 99 நாட்கள்) இந்திய அணிக்காக களமிறங்கிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
தனது அறிமுகப் போட்டியில் 10 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 14 ரன்கள் எடுத்தார் சூரியவன்ஷி.இந்திய அணிக்கு துவக்க வீரர் அபிஷேக் சர்மா 24 பந்துகளில் அதிரடியாக 43 ரன்கள் குவித்து சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் (40 பந்துகளில் 49 ரன்கள்) மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (22 பந்துகளில் 37 ரன்கள்) ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 190 ரன்களை எட்டியது.191 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேக்கப் பெத்தேல் தூணாக நின்று விளையாடினார். பொறுப்புடன் ஆடிய அவர் அரைசதம் கடந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். 17-வது ஓவரில் ரவி பிஷ்னோய் பந்துவீச்சை சிதறடித்த பெத்தேல், அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு போட்டியை இங்கிலாந்து பக்கம் திருப்பினார். அந்த ஓவரில் மட்டும் இங்கிலாந்து அணி 29 ரன்களைக் குவித்தது.
முன்னதாக, வருண் சக்கரவர்த்தி வீசிய 15.2-வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்ற வில் ஜேக்ஸ் எல்பிடபிள்யூ (LBW) முறையில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சாம் கரன் அதிரடியாக விளையாட முயன்றார். ஆனால், ஹர்ஷித் ராணா வீசிய பந்தில் வைபவ் சூரியவன்ஷிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்களில் வெளியேறினார். இதற்கிடையே எல்லைக்கோடு அருகே பந்தைத் தடுக்க முயன்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இறுதி நேரத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மிகக் குறைந்த ரன்களே தேவைப்பட்ட நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேக்கப் பெத்தேல் களத்தில் நிதானமாக விளையாடினர். அர்ஷ்தீப் சிங் வீசிய 19-வது ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றியை உறுதி செய்தது. பவர்பிளேவில் ஆர்ஸ்தீப் சிங் வீசிய ஓவரும், ரவி பிஸ்னாய் வீசிய ஓவரும் சேர்த்தாலே இங்கிலாந்து அணி 50 ரன்கள் மேல் அடித்துள்ளது. இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது.


Click it and Unblock the Notifications
