Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ஜடேஜா மிஸ் செய்துவிட்டார்.. அதை செய்திருக்கனும்.. குறை சொன்ன கவாஸ்கர்

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கடைசி வரை போராடி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் இந்திய வீரர் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 6 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் நடப்பு டெஸ்ட் தொடரில் தொடர்ந்து நான்காவது முறை ஜடேஜா அரை சதம் அடித்திருந்தார்.

இந்த சூழலில் இந்திய அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்து அதிரடியாக ஆடி இருக்கலாம் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.இது குறித்து பேசிய அவர் ,இந்திய அணி ஒரு 60, 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தால் நிச்சயம் இந்த இலக்கை எட்டிருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை.சில சமயம் ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விளையாடிருக்கலாம். இதற்காக தூக்கி தான் அடிக்க வேண்டும் என்பதல்ல, தரையிலே கேப்பை பார்த்து அடித்து பவுண்டரி அடிக்க முயற்சி செய்திருக்கலாம்.

sunil Gavaskar

என்னைக் கேட்டால் ஜோரூட் மற்றும் சோயிப் பஷிர் பந்து வீசும் போது இந்த முடிவை ஜடேஜா எடுத்திருக்க வேண்டும். எனினும் ஜடேஜா விளையாடிய ஆட்டத்திற்கு என்னுடைய முழு மதிப்பெண்களை நான் வழங்குகிறேன். சோயிப் பசீர் பந்து வீச வந்தபோது ஸ்டோக்ஸ் 30 மீட்டர் சர்க்கிள் எல்லையில் தான் நின்று கொண்டிருந்தார். இதனால் ஜடேஜா ஒரு பந்தையாவது தூக்கி அடித்திருக்க வேண்டும்.

ஆனால் சிராஜ் பேட்டிங் செய்ய வந்தபோது ஸ்டோக்ஸ் நேராக பவுண்டரி லைனில் சென்று கொண்டிருந்தார் என்று கவாஸ்கர் கூறியிருந்தார். மேலும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வெற்றிக்கு 23 ரன்கள் இருந்தபோது ஜடேஜா, பஷீர் பந்துவீச்சில் தொடர்ந்து நான்கு சிக்ஸர்கள் அடித்து இருக்க வேண்டும் என்று பேசி வருகின்றனர்.

ஆனால் ஜடேஜா ரிஸ்க் எடுத்து ஆடி விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்பதற்காக தான் அவர் கடைசி வரை பொறுமை காத்து விளையாடினார். மேலும் கைவசம் விக்கெட் இல்லாமல் போனது ஜடேஜா அதிரடி காட்டாமல் இருந்ததற்கு காரணம். மேலும் ஜடேஜா தனியாளாக போராடி அணியை வெற்றியின் அருகே கொண்டு வந்ததால் அவரை குறை சொல்வது என்பது தவறு.

Story first published: Tuesday, July 15, 2025, 12:40 [IST]
Other articles published on Jul 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+