Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

71 ஆண்டு வரலாற்றை முறியடித்த ஆண்டர்சன்.. சச்சின், விராட் கோலி, சுப்மன் கில்.. 3 தலைமுறையும் காலி!

விசாகப்பட்டினம் : சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் சுப்மன் கில் என்று 3 தலைமுறை வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இங்கிலாந்து அணிக்காக 22 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருகிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன். வேகப்பந்துவீச்சாளராக தொடர்ந்து 10 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டை ஆடுவதே எளிதல்ல. காயத்தால் சில ஆண்டுகள் ஓய்வு, மீண்டும் கம்பேக், மீண்டும் காயம் என்றே வேகப்பந்துவீச்சாளர்களின் வாழ்க்கை இருக்கும். ஆனால் ஆண்டர்சன் பெரிய காயமின்றி GOAT வீரராக உயர்ந்துள்ளார்.

IND vs ENG : James Anderson is the olders player to play Test Cricket in India and He got Sachin Tendulkar, Virat Kohli and Gill wickets

தற்போது 6வது முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், இதுவரை 184 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 690 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளர். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தி மிரட்டியுள்ளார்.

கடந்த போட்டியில் இளம் வீரரான மார்க் வுட் விளையாடி ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாத நிலையில், ஆண்டர்சன் முதல் செஷனிலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். அதேபோல் சுப்மன் கில்லின் விக்கெட்டை 5வது முறையாக ஆண்டர்சன் வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை மட்டும் 9 முறை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீழ்த்தி உள்ளார்.

அதேபோல் விராட் கோலியின் விக்கெட்டை 7 முறையும், சுப்மன் கில் விக்கெட்டை 5 முறையும் வீழ்த்தியுள்ளார். கிட்டத்தட்ட 3 தலைமுறை வீரர்களின் விக்கெட்டை ஆண்டர்சன் வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடிய மூத்த வீரர் என்ற சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.

இவருக்கு முன் 1952ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் லாலா அமர்நாத் 41 வயது 92 நாட்களில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 41 வயது 187 நாட்களாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் முறியடித்துள்ளார். மேலும், ஆண்டர்சன் இன்னும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 2, 2024, 13:38 [IST]
Other articles published on Feb 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+