
இங்கிலாந்து
இங்கிலாந்து அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், ஆர்ச்சர், பெஸ் ஆகியோர் சிறப்பாக பவுலிங் செய்தனர்.முக்கியமாக பெஸ் அதிரடியாக பவுலிங் செய்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆண்டர்சன்
இதில் இங்கிலாந்து வீரர்கள் பந்தை மிகவும் சிறப்பாக கவனித்துக் கொண்டனர். இந்திய வீரர்கள் போல அதிகமாக வியர்வை போட்டு பந்தை மிருதுவாக மாற்றவில்லை. மாறாக பந்தை முடிந்த அளவு சொரசொரப்பாக்கி ஸ்விங் செய்தனர். அதிலும் ஆண்டர்சன் பந்தை சிறப்பாக கையாண்டார்.

சிறப்பு
ஆண்டர்சன் பவுலிங் செய்யும் போதே, தனது பந்தை மறைத்து வைத்துதான் பவுலிங் செய்தார். ஒரு கையில் பந்தை வைத்துக்கொண்டு, இன்னொரு கையால் அதை மறைத்துக் கொண்டு பந்தை வீசினார். பந்தின் சொரசொரப்பு பகுதி எங்கே இருக்கிறது என்பதை மறைத்துக் கொண்டார்.

தேய்மானம்
பொதுவாக பவுலிங் செய்யும் போது பந்தின் தேய்மானம் அடைந்த பகுதி எங்கே இருக்கிறது என்பதை பொறுத்துதான் பந்து இன் ஸ்விங் ஆகுமா, அவுட் ஸ்விங் ஆகுமா என்று கண்டுபிடிக்க முடியும். பவுலர்கள் பந்தை எப்படி பிடிக்கிறார்களோ அதை வைத்து பந்தை ஸ்விங் செய்வார்கள். இதை சமயங்களில் பேட்ஸ்மேன்கள் முன்பே பார்த்து பந்து எப்படி செல்லும் என்று கணிப்பார்கள்.

கணிப்பு
ஆனால் ஆண்டர்சன் நேற்று மிகவும் தெளிவாக பந்தை மறைத்துக் கொண்டு வீசினார். பேட்ஸ்மேன் தனது கையை பார்த்துவிட கூடாது என்பதால் முறையாக கையை மறைத்துக் கொண்டு ஆண்டர்சன் பவுலிங் செய்தார். இவர் மட்டுமின்றி ஒவ்வொரு இங்கிலாந்து வீரரும் முறையான திட்டத்தோடு களத்திற்கு வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications