Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: 80 பந்துகளில் இங்கிலாந்து வீரர் ஜெமி ஸ்மித் அதிரடி சதம்.. ஹாரி புரூக்கும் 9வது சதம்

பிர்மிங்காம்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜெமி ஸ்மித் 80 பந்துகளில் சதம் அடித்து அசத்தி இருக்கின்றார். மறுமுனையில் ஹாரி புரூக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஒன்பதாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்கியது. இதில் சுப்மன் கில் அதிரடி இரட்டை சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சிக் 587 ரன்கள் எடுத்தது.

Jamie smith century

இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் ஒரு கட்டத்தில் 84 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற ஸ்கோருடன் தடுமாறியது. இந்த சூழலில் ஹாரி புரூக், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜாமி ஸ்மித் இணைந்தார். இருவரும் கவுண்டர் அட்டாக் ஷாட்களை ஆடி ரன்களை சேர்த்தனர்.

இந்த போட்டியில் இந்திய ஆதிக்கம் செலுத்திய நிலையில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று உற்சாகத்துடன் இரு வீரர்களும் விளையாடினர். குறிப்பாக பிரசித் கிருஷ்ணா வீசிய ஒரே ஓவரில் ஜெமி ஸ்மித் 23 ரன்கள் பறக்க விட்டார். இதனால் இந்திய அணி வீரர்கள் மீண்டும் என்ன செய்வது என்று தெரியாமல் களத்தில் முழித்தனர். வீசும் பந்து எல்லாம் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடுவது போல் இந்த இரண்டு வீரர்களும் அதிரடி காட்டினர்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜெமி ஸ்மித் 80 பந்துகளில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிவேகமாக சதம் அடித்த இங்கிலாந்து வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக அதிவேகமாக சதம் அடித்த நான்காவது வீரர் உள்ளிட்ட பெருமைகளை அவர் பெற்றார். இதே போன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்குப் பிறகு சதம் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் ஜெமி ஸ்மித் பெற்றார்.

மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் 137 பந்துகளில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 12 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும் இது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாரி புரூக் அடித்திருக்கும் ஒன்பதாவது சதமாகும். கடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவர் ஒரு ரன்னில் சதத்தை மிஸ் செய்திருந்தார். இதனால் இந்த ஜோடி ஆறாவது விக்கட்டுக்கு 192 பந்துகளில் 200 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் முதல் செஷனில் இந்த ஜோடி 172 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, July 4, 2025, 18:54 [IST]
Other articles published on Jul 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+