IND vs ENG: ஜோ ரூட் 37வது சதம் விளாசி சாதனை.. டிராவிட், ஸ்மித் ரெக்கார்ட் முறியடிப்பு
லண்டன்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 37வது சதத்தை பூர்த்தி செய்து இருக்கின்றார். இதன் மூலம் ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் ரெக்கார்டுகளை ஜோ ரூட் முறியடித்திருக்கின்றார்.
அது மட்டும் இல்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 3000 ரன்களை ஜோ ரூட் அடித்திருக்கின்றார். கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளாக ஜோ ரூட் பெரிய அளவு சோபிக்கவில்லை. இதன் காரணமாக உலகின் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை இழந்தார்.

இந்த நிலையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜோ ரூட் நல்ல ரெகார்டை வைத்திருந்தார். இந்த நிலையில் தொடக்க வீரர்கள் ஜாக்கிராலி 18 ரன்களிலும், பென்டக்கட் 23 ரன்களிலும், ஆலி போப் 44 ரன்கள் எடுத்து ஆட்டம் இழதனர். இந்த சூழலில் ஜோ ரூட் அபாரமாக ரன்களை சேர்த்து முதல் நாள் ஆட்டம் நேரம் முடிவில் 99 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனை அடுத்து ஜோ ரூட் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கினார். எதிர்பார்த்தபடி ஜோ ரூட் தன்னுடைய 37 வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் டிராவிட், ஸ்மித் ஆகியோரை பின்னுக்கு தள்ளி தற்போது ஜோ ரூட் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 51 சதத்துடன் முதலிடத்தில் உள்ளார்.இதேபோன்று லார்ட்ஸ் மைதானத்தில் ஹட்ரிக் சதம் அடித்த ஜோ ரூட் இந்த மைதானத்தில் தன்னுடைய எட்டாவது சதத்தை பூர்த்தி செய்து இருக்கின்றார். இந்த சூழலில் ஜோ ரூட் பெரிய இன்னிங்ஸ் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜோ ரூட்டை 11 முறை பும்ரா ஆட்டமிழக்க வைத்திருக்கின்றார். இதேபோன்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜோ ரூட் தற்போது 13,218 ரன்கள் அடித்து இருக்கின்றார்.
அவருக்கு முன்பு டிராவிட் 13,288 ரன்களும், காலிஷ் 13,289 ரன்களும் அடித்துள்ளனர் .13,378 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் ரிக்கி பாண்டிங் உள்ளார். இதனால் இந்த தொடர் முடிவடைவதற்குள் ஜோ ரூட் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications