Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG:1598 நாட்களுக்கு பின் திரும்பிய இங்கிலாந்தின் டாப் பவுலர்..முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் காலி

லண்டன்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இருந்தது. இந்த சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 387 ரன்கள் மட்டுமே அவர்கள் எடுத்தனர். எனினும் இந்த மைதானத்தில் இது ஒரு நல்ல இலக்காக தான் பார்க்கப்படுகிறது. இந்த தருணத்தில் இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

jofra archer

வழக்கம் போல் இந்தியாவின் அதிரடி நாயகன் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து பந்துவீச்சை சுளுக்கு எடுத்தார். முதல் ஓவரிலே மூன்று பவுண்டர்களை அடித்து 13 ரன்கள் எடுத்தார். ஜெயிஸ்வாலின் ஸ்ட்ரைக் ரேட் 162 என்று அளவில் இருந்தது. இந்த கட்டத்தில் தான் இங்கிலாந்து அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்கு திரும்பினார்.

ஜோசரா ஆர்ச்சர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதால் அவரால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியும் எழுந்தது. ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சு பழைய மாதிரி இருக்குமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை அவர் தட்டி தூக்கினார். எட்டு பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சை அடிக்க முற்பட்டபோது ஸ்லீப்பில் கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார்.

இதன் மூலம் இந்திய அணி 13 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருக்கின்றது. இன்றைய ஆட்டத்தில் ஜோப்ரா மிகப்பெரிய வித்தியாசத்தை இங்கிலாந்து நியில் ஏற்படுத்துவார் என்று கிரிக்கெட் வல்லுனர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்தி அவருடைய ஸ்டைலில் கொண்டாடினார். நான்காண்டுக்குப் பிறகு திரும்பி முதல் ஓவர்லே விக்கெட் மெய்டனை ஆர்ச்சர் மேற்கொண்டு இருக்கின்றார். இன்னும் சொல்லப்போனால் 1598 நாட்களுக்குப் பிறகு ஜோப்ரா ஆர்ச்சர் முதல் விக்கெட்டை டெஸ்டில் வீழ்த்தி இருக்கின்றார்.

Story first published: Friday, July 11, 2025, 19:58 [IST]
Other articles published on Jul 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+