Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ட்ரிக் வைச்சு எங்களை ஓட விட்டுறலாம்னு மட்டும் நினைக்காதீங்க.. இந்திய அணிக்கு ஆர்ச்சர் வார்னிங்!

சென்னை : இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

அதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி திட்டம் பற்றி பேசினார் அந்த அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர்.

அவர் கூறுகையில், இந்திய அணி சுழற் பந்துவீச்சை ஆயுதமாக வைத்து இங்கிலாந்து அணியை எளிதாக வீழ்த்தி விட முடியாது என எச்சரிக்கை விடுத்தார்.

வெற்றி

வெற்றி

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி உள்ளது. மறுபுறம், இங்கிலாந்து அணி இலங்கை மண்ணில் இரண்டு போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளையும் வென்று இருக்கிறது. இலங்கையில் இருந்து நேராக இந்தியா வந்துள்ளது இங்கிலாந்து அணி.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இலங்கை தொடரில் பங்கேற்காத மூன்று வீரர்களை இங்கிலாந்து அணி இந்திய தொடருக்கு தேர்வு செய்துள்ளது. பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ரோரி பர்ன்ஸ் ஆகிய அந்த மூன்று வீரர்களில் ஆர்ச்சர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஒன்றும் செய்ய முடியாது

ஒன்றும் செய்ய முடியாது

அவர் இந்த டெஸ்ட் தொடர் பற்றி கூறுகையில், "நான் இங்கே ஐபிஎல் தொடரில் நிறைய ஆடி உள்ளேன். அதில் பேட்ஸ்மேன்கள் நம்மை அடிக்க வருவார்கள். ஆனால், இங்கே டெஸ்ட் போட்டியில் அடிக்காமல் இருந்தால், பிட்ச் மந்தமாக இருந்தால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது" என்றார் ஆர்ச்சர்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

மேலும் அவர் கூறுகையில், "பந்து திரும்பினால், அவர்கள் அதிகம் ஸ்பின் செய்தால், போட்டி ஒருதலை பட்சமாக இருக்காது. எங்கள் அணியிலும் நல்ல ஸ்பின்னர்கள் உள்ளனர். இந்தியா ஸ்பின்னை வைத்து எங்களை வீழ்த்தி விட முடியாது" என்றார்.

Story first published: Friday, January 29, 2021, 14:23 [IST]
Other articles published on Jan 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+