Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குருவை போல் சிஷ்யன்.. தோனியின் விக்கெட் கீப்பிங் டெக்னிக்.. அச்சுஅசலாக காப்பியடித்த ஜாஸ் பட்லர்!

தரம்சாலா: இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் விக்கெட் கீப்பிங்கில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனியின் ஸ்டைலை பின் தொடர்வது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 29வது போட்டியில் இந்திய அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணியின் சுப்மன் கில் - ரோகித் சர்மா கூட்டணி அதிரடியாக பேட்டிங்கை தொடங்கியது. 3வது ஓவரிலேயே ரோகித் சர்மா பவுண்டரி, சிக்சர் என்று விளாசி தள்ளினார்.

IND vs ENG: Jos Buttler Copies the Wicket Keeping Style of MS Dhoni to stop the Late Cut shot of KL Rahul in World Cup 2023

ஆனால் மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, பின்னர் ஸ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ரோகித் சர்மா - கேஎல் ராகுல் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து லக்னோ மைதானத்தின் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு உதவியளிக்க, இங்கிலாந்து அணியின் பட்லர் மொயின் அலி மற்றும் ரஷீத் இருவரையும் அட்டாக்கில் கொண்டு வந்தார். இவர்கள் இருவரின் பந்துவீச்சையும் இந்திய அணியின் கேஎல் ராகுல் கணித்து, சிறிது தாமதமாக விளையாடினார். அதேபோல் எளிதாக லேட் கட் ஷாட்களையும் கேஎல் ராகுல் அடிக்க தொடங்கினார்.

அதில் ஒரு பந்து கேஎல் ராகுல் பேட்டில் அடித்து எட்ஜாகி பவுண்டரி லைனுக்கு சென்றது. இதனால் 25 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்களை எட்டியது. கேஎல் ராகுலின் லேட் கட் ஷாட்களை தடுக்க இங்கிலாந்து பவுலர்கள் திணறிய நிலையில், விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் தோனியின் டெக்னிக்கை பயன்படுத்தினார்.

கேஎல் ராகுல் லேட் கட் ஷாட்டை ஆடுவதற்காக பேக் ஃபூட்டில் பின் நகரும் போதே, ஜாஸ் பட்லர் கால்களை கொஞ்சம் அகற்றி பந்தை தடுக்கும் வகையில் செயல்பட்டார். ஜாஸ் பட்லரின் இந்த செயல் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி இதைப் போல் செயல்பட்டுள்ளார். தோனியின் தீவிர ரசிகரான பட்லரும் அதேபோல் செயல்பட்டுள்ளார்.

இதனை பார்த்து வர்ணனை செய்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக், கேஎல் ராகுல் லேட் கட் ஷாட் விளையாட முற்படும் போதெல்லாம் ஜாஸ் பட்லர் கால்களை வெளியில் நகர்த்தி அதனை தடுக்க முயற்சிக்கிறார். அதேபோல் அந்த பந்தை பேட்ஸ்மேன் தவறவிட்டாலும், பந்து பவுண்டரிக்கு செல்லாது. நான் பார்த்த வரையில், முதல்முறையாக தோனி தான் இப்படி செய்துள்ளார். அவருக்கு பின் பட்லர் செய்கிறார் என்று தெரிவித்தார்.

Story first published: Sunday, October 29, 2023, 17:24 [IST]
Other articles published on Oct 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+