Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆண்டர்சன் பந்தில் பறந்த மிரட்டல் சிக்ஸ்.. ஏன் அப்படி அடித்தேன் தெரியுமா? சுப்மன் கில் ஓபன் டாக்!

தரம்சாலா : ஆண்டர்சன் பவுலிங்கில் சிக்ஸ் அடித்ததற்கு பின்னிருக்கும் காரணம் குறித்து இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நம்பர் 3 பேட்டிங் வரிசையில் சுப்மன் கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும், மீண்டும் புஜாராவையே இந்திய அணி நிர்வாகம் கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

IND vs ENG Just Wanted to put Pressure back to James Anderson that s why i hit those six says Shubman Gill

இந்த நிலையில் அனைவரின் விமர்சனங்களுக்கும் தனது பேட் மூலம் சுப்மன் கில் பதிலடி கொடுத்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியின் நம்பர் 3 வீரராக களமிறங்கியவர், ஒரு டெஸ்ட் தொடரில் 400 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சுப்மன் கில் 2 சதம் மற்றும் 2 அரைசதம் உட்பட 452 ரன்களை விளாசியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 110 ரன்களை விளாசி அசத்தியுள்ளார் சுப்மன் கில். அதுமட்டுமல்லாமல் தந்தை முதல்முறையாக டெஸ்ட் போட்டியை நேரில் காண வந்த நிலையில், அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சதம் விளாசி மிரட்டியுள்ளார் கில்.

இதுகுறித்து சுப்மன் கில் பேசுகையில், முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டியை பார்க்க எனது தந்தை வந்துள்ளார். அவரின் ஆசையே டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் ஜொலிக்க வேண்டும் என்பது தான். இன்றைய ஆட்டத்தில் சதம் விளாசியதால், அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்று நம்புகிறேன். ஆண்டர்சன் பவுலிங்கில் சிக்சர் அடிக்கலாம் என்று திடீரென தோன்றியது. ஏனென்றால் அந்த நேரத்தில் பிட்சில் பெரியளவில் டர்ன் கிடைக்கவில்லை.

அதனால் அவரை பிரஷர் செய்யலாம் என்று நினைத்து அடிக்கப்பட்ட ஷாட் தான் அந்த சிக்ஸ். ஃபார்மில் இருந்தாலும், இல்லையென்றாலும் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது மகிழ்ச்சியாக இருப்பேன். ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்த அந்த பந்தை நான் சரியாக பார்க்கவில்லை. ஒவ்வொரு முறையும் களமிறங்கும் போது பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என்பதே எண்ணமாக இருக்கும். சரியான ஸ்டார்ட் கிடைத்தால், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற வெண்டும் என்பதே திட்டம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அந்த சிக்ஸ் அடித்த பின் ஆண்டர்சனுடன் தொடர்ந்து பேசி கொண்டே இருந்தது குறித்த கேள்விக்கு, அந்த உரையாடல் எங்கள் இருவருக்குள் மட்டுமே இருப்பது தான் சரியென்று நினைக்கிறேன் என்று பதிலளித்துள்ளார். இதன் மூலம் இளம் வீரரான சுப்மன் கில்லை சீனியர் வீரரான ஆண்டர்சன் ஸ்லெட்ஜிங் செய்தது தெரிய வந்துள்ளது.

Story first published: Friday, March 8, 2024, 18:21 [IST]
Other articles published on Mar 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+