Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: 2வது இன்னிங்சிலும் கருண் நாயர் ஏமாற்றம்.. மீண்டும் அந்த ஸ்கோரை தாண்டாத கருண் நாயர்

பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அனுபவ வீரர் கருண் நாயர் மீண்டும் ஏமாற்றி இருப்பது ரசிகர்களை ஆத்திரமடைய செய்திருக்கிறது. கருண் நாயர், இந்திய அணியில், கிரிக்கெட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு இறுதியில் முச்சதம் அடித்தார்.

எனினும் அதன் பிறகு பெரிய அளவில் அவர் சாதிக்காததால் இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டது. இந்த சூழலில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையாக போராடி கருண் நாயர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார்.

Karun Nair

ஆனால் தொடர்ந்து நான்கு இன்னிங்ஸ்களாக அவர் ரசிகர்களை ஏமாற்றி வருகிறார். கருண் நாயர் விளையாட வேண்டும் என்பதற்காக இளம் வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. கருண் நாயருக்காக சாய் சுதர்சன் தன்னுடைய இடத்தை இழந்தது மட்டும் இல்லாமல் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதன் காரணமாக கருண் நாயர், மூன்றாவது வீரராக களமிறங்கினார். ஆனால் முதல் இன்னிங்சில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இரண்டாவது இன்னிங்சிலாவது கருண் நாயர் சாதிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் ஐந்து பௌண்டரிகள் மட்டுமே அடித்து 46 பந்துகளை எதிர் கொண்டு 26 ரன்களில் வெளியேறினார். அதன் மூலம் கருண் நாயர் இதுவரை 26 ரன்கள் என்ற ஸ்கோரை இதுவரை இரண்டே இரண்டு முறை தான் தாண்டி இருக்கின்றார். இதுவரை எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள கருண் நாயர் வெறும் இரண்டு முறை தான் 26 ரன்கள் மேல் அடித்து இருக்கின்றார்.

கருண் நாயர் வாய்ப்பு கேட்டு காத்திருந்த நிலையில் தற்போது அவருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தவில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது தொடர்ந்து கருண் நாயர் நான்கு இன்னிங்சில் சோபிக்க தவறிவிட்டதால் அடுத்த டெஸ்ட் போட்டியில் அவர் நீக்கப்பட வேண்டும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Saturday, July 5, 2025, 16:43 [IST]
Other articles published on Jul 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+