லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கம் பேக் கொடுத்த கருண் நாயர் என்ன செய்யப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.ஏனென்றால் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் அடித்த கருண் நாயர், அதன்பின் அடுத்த தொடரில் அதிரடியாக நீக்கப்பட்டார்.
அதன் பிறகு பல ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் போராடிய கருண் நாயர், கடந்த இரண்டு ஆண்டுகளாக ரன்களை வாரி குவித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கவுண்டி கிரிக்கெட்டிலும் சென்று விளையாடி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் அனுபவம் வாய்ந்த கருண் நாயருக்கு வாய்ப்பு இன்றி அணியில் கிடைத்தது.இதன் காரணமாக 3006 தினத்திற்கு பின் இந்திய அணியில் கருண் நாயர் இடம் பிடித்தார். இதனால் கருண் நாயர் பெரிய அளவில் சாதிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 430 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற ஸ்கோரில் கில் வெளியேறிய நிலையில் அப்போது களத்திற்கு கருண் நாயர் வந்தார்.
பெரியதாக சாதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தேவையில்லாமல் ஒரு ஷாட் ஆடி ஒலி போப்பின் அபார கேட்சால் ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக வெறும் 4 பந்துகளை மட்டுமே தாக்குப் பிடித்த கருண் நாயர் டக் அவுட் ஆனார். இது கருண் நாயருக்கு மிகவும் மோசமான கம்பேக்காக அமைந்தது. எனினும் கருண் நாயருக்கு இரண்டாவது இன்னிங்சில் வாய்ப்பு கிடைக்கும்.
அதில் அவர் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தால் மட்டுமே அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் கருண் நாயர் இடம்பெற்று இந்திய அணியில் உறுதியான இடத்தை கொடுக்க முடியும். முதல் இன்னிங்சில் சாய் சுதர்சன், கருண் நாயர் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. கருண் நாயருக்காக காத்திருந்த ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். வானம் மேகமூட்டமாக மாறியவுடன் பந்து ஸ்விங் ஆக தொடங்கியவுடன் இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.