Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: 3149 நாட்களுக்கு பிறகு கருண் நாயர் அரைசதம்.. தனி ஆளாக போராட்டம்.. இந்திய அணி திணறல்

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 3,149 நாட்களுக்கு பிறகு இந்திய அணியின் அனுபவ வீரர் கருண் நாயர் அரை சதம் அடித்திருக்கின்றார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். இந்த சூழலில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Karun nair

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இரண்டு ரன்களிலும், ராகுல் 14 ரன்களிலும் ஆட்டம் இழக்க, இந்திய அணி 38 ரன்களில் இரண்டு விக்கெட் இழந்தது. இதனை அடுத்து சாய் சுதர்சன் மற்றும் கில் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

அப்போது 21 ரன்கள் எடுத்த நிலையில் கில், தேவையில்லாத ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் 38 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஜடேஜா ஒன்பது ரன்களிலும், பண்ட் மாற்றாக களம் இறங்கிய துருவ ஜுரல் 19 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இந்த நிலையில் கருண் நாயர் மீண்டும் கௌதம் கம்பீர் வாய்ப்பு வழங்கினார்.

இதை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு தமது அனுபவத்தை இன்று வெளிப்படுத்தினார். மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க கருண் நாயர் மட்டும் களத்தில் நின்று பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். இவருக்கு வாஷிங்டன் சுந்தர் நல்ல கம்பெனி கொடுத்தார்.

இதனால் கருண் நாயர் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3149 நாட்களுக்கு பிறகு அவர் அரை சதத்தை கடந்திருக்கின்றார். இதன் மூலம் இந்தியாவில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 64 ஓவர் எதிர்கொண்டு 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்திருக்கிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் அவ்வப்போது பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 31, 2025, 23:59 [IST]
Other articles published on Jul 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+