IND vs ENG: என் பேச்சை கேளு வேண்டாம் என்ற ராகுல்.. தலைக் கீழாக குதித்த கேப்டன் கில்.. என்ன நடந்தது?
மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியிலே இந்திய அணி அதிக ரன்கள் அதனை இங்கிலாந்து அணியை ஷேஸ் செய்ய விட்டபோது கில் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.
மேலும் இரண்டாவது டெஸ்டில் தனது அதிரடி பேட்டிங் மூலமும் இந்திய அணியின் அபார பந்துவீச்சு மூலமும் அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். எனினும் மூன்றாவது டெஸ்டில் பேட்டிங் மீண்டும் பல்லை காட்ட இந்தியா தோல்வியை தழுவியது.

தற்போது நான்காவது டெஸ்டிலும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 544 ரன்கள் எடுத்து 186 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. இன்னும் இங்கிலாந்து அணி கைவசம் மூன்று விக்கெட்டுகள் இருப்பதால், இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது.
இந்த தருணத்தில் கில், சரியாக கேப்டன்ஷிப் செய்யாதது இங்கிலாந்து ரன் குவிப்பதற்கு காரணம் என்று விமர்சனம் மீண்டும் எழுந்துள்ளது. இந்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஜோரூட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து காலில் பட்டது. அப்போது நடுவர் அவுட் வழங்கவில்லை. எனினும் பந்தின் பவுன்ஸ் குறைவாக தான் இருக்கும்.
இதனால் நிச்சயம் பந்து ஸ்டம்பில் படும் என வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்கள் கேப்டன் கில்லிடம் கூறினார்கள். ஆனால் அனுபவம் மிக்க வீரரான ராகுல, இந்த இடத்தில் உயரம் என்பது பிரச்சனை இல்லை. ஆனால் அவர் கிரீசுக்கு வெளியே சுமார் மூன்று மீட்டர் வரை வெளியே நின்று இந்த பந்தை எதிர்கொண்டார்.
இதனால் நிச்சயம் இது நாட் அவுட் தான். எனவே ரிவ்யூவை பயன்படுத்த வேண்டாம் என ராகுல் இடம் கூறினார். எனினும் ஜோ ரூட் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்பதற்காக கில், ரிவ்யூவை பயன்படுத்தினார். இறுதியில் ராகுல் சொன்னது தான் சரி என்பது ரிப்ளேவில் தெரியவந்தது. இதனை அடுத்து இந்தியா இரண்டு டிஆர்எஸ் வாய்ப்பையும் வீணடித்தது. தற்போது இந்தியாவிடம் ஒரு டிஆர்எஸ் மட்டும்தான் கைவசம் இருக்கின்றது. ராகுல் சரியான முடிவை எடுத்த நிலையில் தொடர்ந்து டிஆர்எஸ் இருப்பதில் தவறு செய்வதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications