IND vs ENG: 55 ஆண்டுகளில் முதல் முறை.. கில், ராகுல் சாதனை.. புதிய உச்சம் தொட கில்லுக்கு வாய்ப்பு
மான்செஸ்டர்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆண்டர்சன் டென்டல்கர் கிரிக்கெட் தொடர் பேட்ஸ்மேன்களுக்கு ரன் விருந்தாக மாறி இருக்கின்றது. இங்கிலாந்து ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒவ்வொரு வீரர்களும் 500 ரன்களுக்கு மேல் குவிக்கும் அளவுக்கு ஆடுகளம் தன்மை மாறியிருக்கிறது.
இதனால் சர்வ சாதாரணமாக 500, 600 ரன்கள் எல்லாம் அணியினர் அடித்து வருகிறார்கள். இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் தொடக்க வீரர் கேஎல் ராகுல் ஆகியோர் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றனர்.

அதாவது ஒரே தொடரில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் 500 ரன்கள் அடித்தது 55 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1970-71 ஆம் ஆண்டு கவாஸ்கர், திலீப் சர்தேசாய் ஜோடி இத்தகைய சாதனையை படைத்திருந்தது. நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுகிறது.
இதில் கில் 78 ரன்களும், ராகுல் 87 ரன்கள் உடனும் களத்தில் உள்ளனர். இதன் மூலம் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருக்கிறது. இங்கிலாந்து அணியை விட 137 ரன்கள் பின் தங்கியுள்ளது. இதன் மூலம் கில் நடப்பு தொடரில் 697 ரன்களும், ராகுல் 508 ரன்களும் அடித்துள்ளார். இதற்கு முன்பாக 1970-71 ஆம் ஆண்டு கவாஸ்கர் சர்தேசாய் இத்தகைய சாதனையை படைத்திருந்தனர்.
இந்த நிலையில் கூடுதலாக 78 ரன்கள் அடித்தால் ஒரே தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு முன்பு கவாஸ்கர் 1970- 71 வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அதிகபட்சமாக 774 ரன்கள் அடித்திருக்கின்றார். இதுதான் ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் ஒருவர் அதிக ரன்கள் அடித்ததாகும். தற்போது இந்த சாதனையை முறியடிக்க கில்லுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. இன்னும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இருப்பதால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய ஒரு சாதனையை படைக்க முடியும்.


Click it and Unblock the Notifications