Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ராகுல் உங்க பொறுப்பை உணர்ந்து விளையாடுங்க.. முன்னாள் கிரிக்கெட் வீரர் வார்னிங்

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் முக்கிய பொறுப்பை ஏற்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன், தெரிவித்துள்ளார். ராகுல் அணியில் மிகவும் அனுபவமிக்க பேட்ஸ்மேனாக இருப்பதால், கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

வரவிருக்கும் தொடரில் ராகுல் மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும் என்று ராமன் தெரிவித்தார். ராகுலின் பேட்டிங் பொசிஷன் குறித்தும் அவர் ஆலோசனை வழங்கினார். சமீபத்தில் தொடக்க வீரராக ஆடிய ராகுல், கடந்த சில ஆண்டுகளாக மிடில் ஆர்டரில் ஆடியுள்ளார்.

KL Rahul

வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதால், இங்கிலாந்தில் அவர் வெற்றி பெறுவார் என்று ராமன் நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், "கேஎல் ராகுல் நிச்சயமாக தனது ஆட்டத்தை உயர்த்த வேண்டும்."

"ஏனெனில் அவர் அணியில் மிகவும் அனுபவமிக்கவர். அவர் நீண்ட காலமாக அணியில் இருக்கிறார், மேலும் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். எனவே, கே.எல்.ராகுல் மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும்."

"ராகுல் எந்த இடத்தில் பேட்டிங் செய்யப் போகிறார் என்பது இந்தத் தொடரில் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும், ஏனெனில் அவர் பல்வேறு ஃபார்மெட்டுகளில் மேலும் கீழும் ஆடியுள்ளார். அவரது சிறப்பு என்னவென்றால், எந்த இடத்தில் ஆடினாலும் ரன்கள் குவிக்கிறார்."

"ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், யார் எந்த இடத்தில் ஆடுவார்கள் என்பதை அணி நிர்வாகம் தெளிவாக முடிவு செய்ய வேண்டும். ஏனெனில், தொடரின் முதல் பாதியில் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு, பின்னர் தொடரின் முக்கியமான கட்டங்களில் சிறந்த காம்பினேஷனைத் தேர்வு செய்ய இது உதவும்," என்று ராமன் மேலும் தெரிவித்தார்.

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர்க ராகுல் களமிறங்கி சதம் அடித்தார். இரடணடாவது இன்னிங்சிலும் ராகுல் அரைசதம் எடுத்தார். இதனால், ராகுல் ஓப்பனிங் தான் இந்த தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, June 15, 2025, 22:37 [IST]
Other articles published on Jun 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+