Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ராகுல் இல்லனா அவ்வளவு தான்.. அவருக்கு மரியாதையை கொடுங்க.. முன்னாள் தொடக்க வீரர் கருத்து

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் பலமாக இருப்பதற்கு கே எல் ராகுல் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றார். தொடக்க வீரராக குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பட்டையை கிளப்புகிறார். நடப்பு தொடரில் 511 ரன்ளை அவர் குவித்து இருக்கின்றார்.

இதில் இரண்டு சதம் அடங்கும். அவருடைய சராசரி 63 என்ற அளவில் இருக்கின்றது. மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ராகுல் இரண்டாவது இன்னிங்ஸில் கில்லுடன் இணைந்து 230 பந்துகள் எதிர் கொண்டு 90 ரன்கள் சேர்த்தார்.

KL Rahul

இந்த நிலையில் ராகுலின் இந்த செயல் திறனை பாராட்டி உள்ள ஆகாஷ் சோப்ரா," ஒரு கட்டத்தில் சிலருக்கு நாம் அவர்களுக்கு சேர வேண்டிய மரியாதையை கொடுத்தே ஆக வேண்டும். ஒரு உண்மையான தலைவர் போல் ராகுல் விளையாடுகின்றார். களத்தில் அவர் அபாரமாக செயல்படுகின்றார். மான்செஸ்டர் டெஸ்டில் அவர் சதத்தை தவற விட்டு இருக்கலாம்."

" ஆனால் இந்திய அணியின் முதுகெலும்பாக ராகுல் விளங்குகிறார். இந்த தொடரில் இந்தியாவில் ரோகித் சர்மாவை மிஸ் செய்து இருக்கும்.ஏனென்றால் கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ரோகித் சிறப்பாக விளையாடினார். ஆனால் இம்முறை ராகுலும் ஜெய்ஸ்வாலும் நன்றாக செயல்பட்டு இருக்கிறார்கள்."

" தொடக்கத்தில் நன்றாக விளையாடி நம்பிக்கை அளித்து இருக்கின்றார்கள். இவர்களுடைய செயல்பாடு இந்தியா அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கின்றது என்று ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு தென்னாப்பிரிக்க வீரர் கிரேம் ஸ்மித்க்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 ரன்களை கடந்த இரண்டாவது தொடக்க வீரர் என்று பெருமை ராகுலுக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இல்லாமல் சுனில் கவாஸ்கருக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் 500 ரன்கள் மேல் குவித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்திருக்கின்றது.

Story first published: Tuesday, July 29, 2025, 17:27 [IST]
Other articles published on Jul 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+