Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உயிரை கொடுத்து ஆடினார்.. அவரை கூட நம்பாத கோலி.. தமிழக வீரரை முக்கிய கட்டத்தில் ஒதுக்கியதால் ஷாக்!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் அதிரடியாக ஆடிய நிலையிலும் இரண்டாவது இன்னிங்சில் அவருக்கு கோலி பவுலிங் கொடுக்கவில்லை.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னையில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 178 ரன்னிற்கு ஆல் அவுட்ஆகியுள்ளது.

இந்தியாவிற்கு இங்கிலாந்து 419 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.

போட்டி

போட்டி

இந்த போட்டியில் இந்திய அணியை புஜாரா, பண்ட், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சரிவில் இருந்து மீட்டனர். அதிலும் அதிரடியாக ஆடிய சுந்தர் அசால்ட்டாக முதல் இன்னிங்சில் 85 ரன்கள் எடுத்தார். இவரை கடைசி வரை இங்கிலாந்து பவுலர்களால் அவுட் செய்ய முடியவில்லை.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

85 ரன்கள் எடுத்து இவர் நாட் அவுட் வீரராக இருந்தார். இப்படி இங்கிலாந்து அணிக்கு தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் அதிரடியாக ஆடிய நிலையிலும் இரண்டாவது இன்னிங்சில் அவருக்கு கோலி பவுலிங் கொடுக்கவில்லை. இரண்டாவது இன்னிங்சில் ஸ்பின் பவுலிங்கிற்கு பிட்ச் நன்றாக கை கொடுத்ததது.

விக்கெட்

விக்கெட்

அதிலும் வேகமாக இங்கு அதிக பவுன்ஸ் ஆகும் வகையில் பந்து வீசினால் விக்கெட் விழும். இதில் சுந்தர் எளிதாக விக்கெட் எடுக்க முடியும். அஸ்வின், நதீமை விட சுந்தர் வேகமாக பவுலிங் செய்ய கூடியவர். ஆனால் கோலி அவருக்கு ஒரே ஒரு ஓவர்தான் இரண்டாவது இன்னிங்சில் கொடுத்தார்.

பவுன்ஸ்

பவுன்ஸ்

அதுவும் கூட கடைசியில்தான் ஓவர் கொடுத்தார். நதீம் பெரிதாக விக்கெட் எடுக்கவில்லை. அதிகம் ரன் கொடுத்தார். ஆனாலும் கோலி அவருக்கு அடுத்தடுத்து ஓவர் கொடுத்துக் கொண்டே இருந்தார். சுந்தர் நினைத்து இருந்தால் அஸ்வின் உடன் சேர்ந்து விக்கெட் எடுத்து இருக்க முடியும்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்து அணியை இன்னும் எளிதாக அவுட் செய்து குறைந்த இலக்கில் காலி செய்திருக்க முடியும். ஆனால் இப்படிப்பட்ட சூப்பரான பிட்சில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சுந்தரை கோலி பவுலிங் செய்ய களமிறக்காமல் தவறு செய்தார். கோலியின் இந்த முடிவு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

Story first published: Monday, February 8, 2021, 22:55 [IST]
Other articles published on Feb 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+