Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களுக்காக அவரை உட்கார வைத்துவிட்டேன்.. இன்னிங்ஸ் பிரேக்கில் நொந்து கொண்ட கோலி.. கடும் கோபம்!

சென்னை: இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடி வந்தாலும் கூட அணி தேர்வில் நடந்த தவறு ஒன்றால் கோலி கோபத்தில் இருக்கிறார் என்கிறார்கள்.

இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில் இந்தியா தற்போது மீண்டும் பேட்டிங் செய்து வருகிறது. சென்னையில் நடக்கும் இரண்டாவது டெஸ்டில் இந்தியாவின் அதிரடி பவுலிங்கில் இங்கிலாந்து அணி 134 ரன்னுக்கு சுருண்டது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 195 ரன்கள் பின்னடைவை சந்தித்துள்ளது. அஸ்வின் மீண்டும் 5 விக்கெட் எடுத்து அசத்தி இருக்கிறார்.

 இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடி வந்தாலும் கூட அணி தேர்வில் நடந்த தவறு ஒன்றால் கோலி கோபத்தில் இருக்கிறார் என்கிறார்கள். இந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இவர் இன்று பவுலிங் செய்தார்.

 குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

இன்று மொத்தம் குல்தீப் யாதவ் 6 ஓவர்களை வீசினார். ஆனால் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை . அதேபோல் இன்று குல்தீப் யாதவ் அதிகமாக ரன்களை கொடுத்தார். இவரின் பவுலிங் பெரிய அளவில் சிறப்பாக இல்லை.

அழுத்தம்

அழுத்தம்

இந்திய அணிக்கு குல்தீப் யாதவ் பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கவில்லை. அதேபோல் கோலி எதிர்பார்த்தபடியும் குல்தீப் யாதவ் பவுலிங் வீசவில்லை. இதனால் இன்னிங்ஸ் பிரேக்கில் குல்தீப் யாதவ் மீது கோலி கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.

பிட்ச்

பிட்ச்

இவ்வளவு நல்ல பிட்சில் விக்கெட் எடுக்கவில்லையே என்று கோலி கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. தமிழக வீரர் சுந்தருக்கு பதிலாக இவரை களமிறங்கியது தவறோ என்று கோலி நினைக்கும் அளவிற்கு சென்றுவிட்டது.

 சுந்தர்

சுந்தர்

இந்திய அணியில் சுந்தர் இருந்திருந்தால் நன்றாக பேட்டிங் செய்திருப்பார். இரண்டு வருடங்களாக குல்தீப் யாதவை சேர்க்கவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதனால் அடுத்த போட்டியில் குல்தீப் யாதவ் மீண்டும் ஓரங்கட்டப்பட வாய்ப்புள்ளது.

Story first published: Sunday, February 14, 2021, 16:54 [IST]
Other articles published on Feb 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+