Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி ரூல்ஸையே மாத்தனும்... ஈசியா தெரியலனு சொல்றாங்க...சூர்யகுமார் விக்கெட் சர்ச்சை..கோலி அதிருப்தி

அகமதாபாத்: 4வது டெஸ்ட் போட்டியில் சூர்யகுமார் யாதவின் விக்கெட் சர்ச்சையாகும் நிலையில் நடுவர்களுக்கு நறுக்கென கேள்வி கேட்டுள்ளார்.

Recommended Video

ஆரம்பத்தில் இருந்தே அதிரடி.. Suryakumar yadhav வேற லெவல் ஆட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 2 -2 என சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் ஆட்டத்தின் போது சூர்யகுமார் யாதவ் விக்கெட்டில் நடுவரின் முடிவுகுறித்து விராட் கோலி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி

இந்திய அணி

முதல் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், கோலி, ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். ஆனால் மறுமுனையில் முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதிரடியாக ஆடிய அவர் 31 பந்துகளில் 57 ரன்களை அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாம் கரண் பந்துவீச்சில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அவரை அவுட் ஆக்கிய விதம், மூன்றாவது நடுவரின் முடிவு கடும் சர்ச்சைக்குள்ளானது.

அவுட்

அவுட்

ஆட்டத்தின் 14வது ஓவரை சாம் கரண் வீச, பந்தை ஃபைன் லெக் திசையில் சூர்யகுமார் யாதவ் தூக்கி அடித்தார். அதனை டேவிட் மாலன் பந்து தரையை தொடும் நிலையில் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். மிகவும் க்ளோஸ் காலாக இருந்த சூழ்நிலையில் களத்தில் இருந்த நடுவர் அனந்த பத்மநாபன், அவுட் கொடுத்துவிட்டு பின்னர் 3வது நடுவர் வீரேந்திர சர்மாவுக்கு பரிந்துரை செய்தார்.

தெளிவு இல்லை

தெளிவு இல்லை

3வது நடுவர் பல முறை ஸ்லோ-மோஷனில் ரீப்ளே செய்து பார்த்தார். நன்றாக பார்த்தால் மாலனின் விரல்களுக்கு இடையில் பந்து தரையைத் தொட்டது தெளிவாக தெரிந்தது. எனினும் வீடியோவில் சரியாக கணிக்க முடியவில்லை எனக்கூறி கள நடுவரின் சாஃப்ட் சிக்னலே கடைசி முடிவு 3வது நடுவர் தெரிவித்தார். இதனால் சூர்யகுமார் யாதவ் வெளியேறினார். எனவே நடுவரின் முடிவுக்கு எதிராக இணையத்தில் போர் வெடித்து வருகிறது.

விராட் கோலி

விராட் கோலி

இதுகுறித்து பேசிய விராட் கோலி, இது இரு அணிக்கும் முக்கியமான போட்டி. ஒரு தவறான தீர்ப்பு, போட்டியின் முடிவைக் கூட மாற்றிவிடும். டெஸ்ட் தொடரில் ரஹானே ஒரு கேட்சை இதே போன்று பிடித்தார். தெளிவாக தெரிந்தது அது அவுட் என்று, ஆனால் கள நடுவர் 'எனக்கு தெரியாது' எனக்கூறி 3வது நடுவருக்கு பரிந்துரைத்தார். கள நடுவர்களின் சாஃப்ட் சிக்னல் மிக முக்கியமானது. எனவே விதிகளை எளிமையாக்க வேண்டும். இனிவரும் போட்டிகளில் இதுபோன்ற சர்ச்சை இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, March 19, 2021, 18:35 [IST]
Other articles published on Mar 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+