
எப்படி
இந்த டெஸ்ட் தொடரில் முறைப்படி இந்திய அணியில் அக்சர் பட்டேல் ஆடி இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு கடைசி நொடியில் காயம் ஏற்பட்டதால் அணியில் நதீம் சேர்க்கப்பட்டார். முறைப்படி இந்திய அணியில் குல்தீப் ஆடி இருக்க வேண்டும். ஆனால் கோலியோ நான் கேப்டன்.. பாருங்கள் இப்போது வித்தியாசமான முடிவு எடுக்கிறேன் என்று ஸ்குவாடில் இல்லாத நதீமை அணிக்குள் கொண்டு வந்தார்.

ஆனால்
ஆனால் நதீம் இந்திய அணியில் திடீரென ஆடுவதற்கு தயாராக இல்லை. ஆனாலும் அவரை தேவையின்றி கோலி அணிக்குள் கொண்டு வந்தார். மனரீதியாக தயாராக இல்லாத இவர் களத்தில் மோசமாக சொதப்பினார். ஒரே லைனில் மட்டுமே இவர் பந்து வீசினார் .

கோலி முடிவு
இவருக்கு விக்கெட் விழவில்லை என்றதும் கோலி கடுமையான நெருக்கடியை வீரர்களுக்கு கொடுத்தார் . இப்படிப்போடு, பந்தை ஆப் திசையில் வீசு என்று நெருக்கடி கொடுத்தார்.நதீம் உண்மையில் நல்ல பவுலர்தான். ஆனால் கோலி கொடுத்த அழுத்தம் அவரை தடுமாற வைத்தது.

அழுத்தம்
கோலி கொடுத்த அழுத்தம் காரணமாக நதீம் தவறுகள் செய்ய தொடங்கினார். இதனால் லென்த் மாறியது, நோ பால் வீசினார். தொடர்ந்து மோசமாக சொதப்பினார். கோலியும் இவருக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தார். அணியில் குல்தீப் எடுக்கப்பட்டு இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது.

2 வருடம்
இந்திய அணிக்குள் வருவதற்கு குறைந்தது 2 வருடமாக இவர் தீவிரமாக முயன்று வருகிறார். அணியில் இணைய எப்போதும் இவர் தயாராக இருக்கிறார். ஆனாலும் கோலி அவரை எடுக்கவில்லை. நதீமை அணியில் எடுத்தது சரிதான் என்றதை நிரூபிக்க நேற்று கடைசி நொடி வரை கோலி முயன்றார்.

மோசமான முடிவு
முக்கியமாக பிட்ச் வாஷிங்க்டன் சுந்தரின் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்தது. அவரின் வேகமாக பவுன்சர் ஸ்டைல் ஸ்பின் பவுலிங்கிற்கு பிட்ச் சாதகமாக இருந்தது. ஆனாலும் சுந்தரை பவுலிங் செய்ய விடாமல் நதீமை கோலி தொடர்ந்து பயன்படுத்தினார். நதீம் விக்கெட் எடுக்க வேண்டும்.

நதீம்
நதீம் விக்கெட் எடுத்தால் நான் எடுத்த முடிவு சரியாகிவிடும் என்று கோலி தீவிரமாக முயன்றார். ஆனால் நதீம் ஒரு பக்கம் விக்கெட் எடுத்தாலும் இன்னொரு பக்கம் நோ பால் , பவுண்டரி கொடுத்து ரன்னை அதிகப்படுத்தினார். தன்னுடைய முடிவை சரியென நிரூபிக்க நேற்று கோலி தீவிரமாக முயன்ற விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications