Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க பார்க்கிறார் கம்பீர்.. குல்தீப் யாதவ் பயிற்சியாளர் புகார்

மான்செஸ்டர்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இந்த தருணத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் மூன்றாவது நாளுக்கு பிறகு சுழற் பந்துவீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த தொடரில் குல்தீப் யாதவை பயன்படுத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், கம்பீரும் அதற்கு செவி சாய்க்கவில்லை.

Kuldeep Yadav

2017 ஆம் ஆண்டு குல்தீப் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால் இதுவரை வெறும் 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். இதில் மொத்தமாக அவர் 56 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். நான்கு முறை குல்தீப் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கின்றார்.

இந்த தருணத்தில் அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில் குல்தீப் யாதவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கம்பீர் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பை மறுத்து வருகிறார். இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள குல்தீப்பின் சிறுவயது பயிற்சியாளர் ஆன கபில் பாண்டே, முதலில் இந்திய அணி நமக்கு ஒரு பேட்ஸ்மேன் வேண்டுமா இல்லை பவுலர் வேண்டுமா என்று முடிவு எடுக்க வேண்டும்.

அவர் பவுலராக இருந்தால் பிளேயிங் லெவனின் அவருடைய பணி பந்து வீசுவது மட்டும் தான் இருக்க வேண்டும். இங்கிலாந்துக்கு எதிராக குல்தீப் யாதவ், இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளின் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் ரஞ்சி கோப்பையில் சதமும் அடித்து இருக்கின்றார்.

குல்தீப் பேட்டிங் பற்றி பேச வேண்டும் என்றால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்திற்கு எதிராக அவர் 40 ரன்கள் எடுத்திருந்தார். இங்கிலாந்து தொடரில் 5 போட்டிகளிலும் குல்தீப் யாதவ் விளையாடுவார் என்று நான் எதிர்பார்த்தேன். ஏனென்றால் சாம்பியன்ஸ் கோப்பையில் 5 போட்டிகளில் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.ஐபிஎல் தொடரிலும் 15 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார்.

அது மட்டும் இல்லாமல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரண்டு ஹாட்ரிக் வீழ்த்தி இருக்கும் வீரராகவும் அவர் விளங்குகிறார். திடீரென்று டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்படுகிறார். இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்திய அணியில் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்றால் அவர் மீண்டும் 5 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும்.

ஆனால் அவர் இன்னும் இங்கிலாந்து தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஆடுகளம் எந்த தன்மையில் இருந்தாலும், முதலில் குல்தீப்க்கு வாய்ப்பை கொடுக்க வேண்டும். இங்கிலாந்து ஆடுகளத்தில் வார்னே எவ்வாறு பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்து இருக்கிறார் என்று பாருங்கள். இங்கிலாந்திடம் லேக் ஸ்பின்னர் இல்லை.

ஆனால் உங்களிடம் உலகத்தரம் வாய்ந்த லேக் ஸ்பின்னர் இருக்கின்றார். பஷீர் கூட மூன்று போட்டிகளில் விளையாடிவிட்டார். ஆனால் குல்தீப் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. அது மட்டும் இல்லாமல் பஷீரில் பந்துவீச்சில் நமது வீரர்கள் ஆட்டம் இழப்பதை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. தற்போது இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு திரும்பிய அன்சூல் காம்போஜ் திடீரென்று முதல் போட்டியில் விளையாடுகிறார். பயிற்சியாளர் அல்லது கேப்டனின் சிபாரிசு இல்லாமல் இதில் நடக்காது. இது போன்ற நெருக்கடியான போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவடைந்து விடும் என்று கபில் பாண்டே கூறியுள்ளார்.

Story first published: Thursday, July 24, 2025, 17:59 [IST]
Other articles published on Jul 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+