For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற டெஸ்ட் வெற்றிகள்.. முதலிடம் பாருங்க?

லண்டன்: 148 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் உயிரோடு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் உலகத்தில் வேறு எந்த விளையாட்டிலும் இல்லாத பல அம்சங்கள் இதில் இருப்பது தான். ஐந்து நாட்கள் ஆட்டம் வெற்றி பெற வாய்ப்பு போட்டியை சமன் செய்ய வாய்ப்பு என பல்வேறு அம்சங்கள் இருக்கின்றது.

மற்ற போட்டிகள் போல் அல்லாமல் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே வெற்றியை உங்களால் பெற முடியும். அதுவும் வெற்றிக்கு 35 ரன்கள் தான் இருக்கின்றது. ஆனால் பந்து வீசும் அணி நான்கு விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்ற கட்டத்தில் ஒரு அணி வெற்றி பெற்றால் அது எவ்வளவு பெரிய சாதனை ஆகும்.

Ind vs Eng

அந்த சூழலில் இந்திய அணி பேட்டிங் செய்து பல இலக்கை சேஸ் செய்து வெற்றியை பெற்றிருக்கிறது. ஆனால் பந்துவீசி எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது கொஞ்சம் தான். அந்த வகையில் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற டெஸ்ட் போட்டிகளை தற்போது பார்க்கலாம்.

குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற வெற்றிகள்:

இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருப்பது 2006ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிங்ஸ்டனில் நடைபெற்ற தொடர் தான். இதில் 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதேபோன்று 2002 ஆம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பைனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

அதேபோன்று 2018 ஆம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது 1972 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஆகும். இதில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2025 லண்டன் ஓவல் டெஸ்ட்:

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது 2004 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஆகும். இதில் முரளி கார்த்திக்கின் அபார பந்துவீச்சால் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த பட்டியலில் முதலிடத்தில் லண்டன் ஓவலில் நேற்று நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஆகும். இதில் வெறும் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று அசத்தியது.

Story first published: Tuesday, August 5, 2025, 11:41 [IST]
Other articles published on Aug 5, 2025
English summary
Ind vs Eng- List of Narrowest win by Runs for India in Test cricket History
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+