இங்கிலாந்து அணி வெற்றி பெற 8 ஓவரில் 70 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயிக்கும்- வாஹன் கணிப்பு
மான்செஸ்டர்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது கிளைமாக்ஸ் நோக்கி நெருங்கி வந்திருக்கின்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதனால்,நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும். இதனால் இந்த போட்டியில் இந்திய அணி டிரா செய்து கடைசி டெஸ்டில் வெற்றி பெற்றால் தொடர் சமமாகிவிடும். இந்த தருணத்தில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 358 ரன்களும், இங்கிலாந்து அணி 669 ரன்களும் குவித்தது.

இதனால் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. நான்காவது நாள் ஆட்டநேரம் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்னும் இந்திய அணி 137 ரன்கள் பின்தங்கி இருக்கிறது.
கைவசம் எட்டு விக்கெட்டுகள் உள்ள நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி டிரா செய்ய வேண்டும் என்றால் இங்கிலாந்து அடித்த ஸ்கோரை விட கூடுதலாக 150 அல்லது 200 ரன்கள் குவிக்க வேண்டும். ஆனால் அதுவரை இந்திய அணி வீரர்கள் தாக்குப் பிடிப்பார்களா என்று தெரியவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ஐந்தாவது நாளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
எனவே அதில் ஒரு 20 ஓவர் வீசப்படாத நிலை ஏற்படலாம். இதில் இந்திய அணி ஒரு 70 ஓவர் பேட்டிங் செய்கிறது என வைத்துக் கொள்வோம். அதில் 17 ஓவர்கள் பழைய பந்து வைத்து தான் இங்கிலாந்து வீசும். அடுத்த 53 ஓவர் புதிய பந்தை வைத்து இங்கிலாந்து வீசும். இதனால் இந்த போட்டியை சமன் செய்வதற்கு இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கின்றது.
இதனால் கடைசி டெஸ்ட் போட்டிக்கு இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா சென்றால் இது மிகப்பெரிய எஸ்கேப்பாக இந்தியாவுக்கு இருக்கும். ஒருவேளை புதிய பந்தில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தால் அவர்கள் மேலும் ஐந்தாவது நாளில் 200 ரன்கள் சேர்ப்பார்கள். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எட்டு ஓவர்கள் எஞ்சி இருக்கும் நிலையில் 70 ரன்கள் ஷேஸ் செய்ய வேண்டும் என்ற நிலை கூட ஏற்படலாம் என்று மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications