Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10 பந்தும் வெறித்தனம்.. சரித்து காட்டிய முகமது ஷமி.. பென் ஸ்டோக்ஸின் அந்த ரியாக்சன் தான் ஹைலைட்!

லக்னோ: இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ்-க்கு 9 பந்துகளை டாட் பாலாக வீசிய முகமது ஷமி, 10வது பந்தில் விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் மிகமுக்கியமான பந்துவீச்சாளர் முகமது ஷமி. பந்தின் சீம் பகுதியை பிடித்து 140 கிமீ வேகத்தில் முகமது ஷமி பந்துவீசினால், சர்வதேச கிரிக்கெட்டில் திணறாத பேட்ஸ்மேன்களே இல்லை என்று நிச்சயமாக சொல்லலாம். உலகின் தலைசிறந்த வீரர்களை அசால்ட்டாக வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைப்பவர் முகமது ஷமி.

IND vs ENG: Mohammad Shami dismissed Ben Stokes with a fantastic Delivery at Lucknow in the ICC World Cup 2023

அந்த வகையில் இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ஷமியின் ஒரு ஸ்பெல் ஜாம்பவான் வீரர்களையும் ஒரு நிமிடம் உலுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. சமகால கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ்-க்கு களத்தில் நரகத்தை காட்டிவிட்டார் என்றே சொல்லலாம்.

ஜோ ரூட் ஆட்டமிழந்த பின் உடனடியாக பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். அப்போது 6வது ஓவரிலேயே முகமது ஷமி அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். முதல் 2 பந்துகளில் பேர்ஸ்டோவ் 3 ரன்கள் எடுத்து எதிர்முனைக்கு சென்றார். அதன்பின் பென் ஸ்டோக்ஸ்-க்கு ஷமி வீசிய 4 பந்துகளும் டாட் பால்கள் தான். அதன்பின் பும்ரா மெய்டன் ஓவர் வீச, களத்தில் பரபரப்பு அடுத்த கட்டத்திற்கு எகிறியது.

இப்போது மீண்டும் முகமது ஷமியை எதிர்கொள்ள பென் ஸ்டோக்ஸ் வந்தார். முதல் 5 பந்திலும் பென் ஸ்டோக்ஸ் ரன்கள் சேர்க்க முட்டி மோதி போராடுகிறார். ஆனால் முகமது ஷமி வேகத்தில் ஒவ்வொரு முறையில் பென் ஸ்டோக்ஸ் Beaten செய்யப்பட, மீண்டும் மெய்டன் ஆகிவிடுமோ என்ற பதற்றம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எகிறியது.

IND vs ENG: Mohammad Shami dismissed Ben Stokes with a fantastic Delivery at Lucknow in the ICC World Cup 2023

இதனால் பென் ஸ்டோக்ஸ் முகத்திலேயே பொறுமை இழந்தது தெரிந்தது. ஆனால் முகமது ஷமி எந்தவித பதற்றத்தையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் கடந்த 9 பால்களில் என்ன லெந்தில் வீசினாரோ அதே லெந்தில் பந்தை பிட்ச் செய்தார். அப்போது 3 ஸ்டம்புகளையும் காட்டி ரன்கள் சேர்க்க முயன்ற பென் ஸ்டோக்ஸ், போல்டாகி வெளியேறினார்.

ஷமி தொடர்ச்சியாக 9 டாட் பால்களை வீசியதன் விளைவால் 10வது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். பெவிலியனுக்கு திரும்பிய போது பென் ஸ்டோக்ஸ், வாயை திறந்து மிரண்டு போய் நடந்து சென்றது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பேர்ஸ்டோவ் மற்றும் மொயின் அலி ஆகியோரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார் முகமது ஷமி. இதுவரை 6 ஓவர்களை வீசியுள்ள அவர் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 மெய்டன்கள் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Story first published: Sunday, October 29, 2023, 21:15 [IST]
Other articles published on Oct 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+