Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பையில் வரலாற்றை மாற்றப்போகும் முகமது ஷமி.. ஹர்திக் பாண்டியா வந்தாலும் இனி பிரச்சனையில்லை!

லக்னோ: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 13 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 230 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தாலும், இங்கிலாந்து அணி வெறும் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை தழுவியுள்ளது. இந்திய அணியின் அபார வெற்றிக்கு இந்திய அணி பவுலர்களே முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். பும்ரா, முகமது ஷமி இருவரும் 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கதறவிட்டனர் என்றே சொல்லலாம்.

IND vs ENG: Mohammad Shami got 40 Wickets in just 13 innings in the World Cup History

அதிலும் பென் ஸ்டோக்ஸை செட் செய்து முகமது ஷமி வீழ்த்திய சம்பவம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மூளையில் இன்னும் பல ஆண்டுகள் நிலைத்திருக்கும். அப்படியான ஒரு ஸ்பெல்லை முகமது ஷமி வீசியிருக்கிறார். ஒவ்வொரு பேட்ஸ்மேனும் என்ன செய்ய முயற்சிக்கிறார், அவரின் பலம் என்ன என்பதை அறிந்து பந்துவீசிவதில் தான் முகமது ஷமி வித்தியாசப்படுகிரார். வெறுமனே பந்துவீசுகிறோம் என்றல்லாமல், பேட்ஸ்மேனின் மூளைக்குள் என்ன ஓடுகிறது என்பதை எளிதாக புரிந்து அதற்கேற்ப பந்துவீசி விக்கெட்டை வீழ்த்துகிறார் ஷமி.

அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடர் என்று வந்துவிட்டால் முகமது ஷமி பீஸ்ட் ஃபார்முக்கு வந்துவிடுகிறார். 2015 உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி, 2019 உலகக்கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தற்போது 2 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி, மொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இதுவரை இந்திய அணிக்காக உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள வீரர்களில் அதிகபட்சமாக 23 இன்னிங்ஸ்களில் விளையாடி ஜாகீர் கான் 44 விக்கெட்டுகளையும், 33 இன்னிங்ஸ்களில் விளையாடி ஜவஹல் ஸ்ரீநாத் 44 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்த உலகக்கோப்பை தொடரில் முகமது ஷமி விளையாடும் பட்சத்தில், எளிதாக முகமது ஷமி இவர்களின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் முகமது சிராஜ் இன்னும் ஃபார்முக்கு வரவில்லை. இதனால் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைந்து வந்தாலும், முகமது ஷமி பிளேயிங் லெவனில் தொடர்வார் என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, October 30, 2023, 15:44 [IST]
Other articles published on Oct 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+