For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிடும் என பயந்தேன்.. ஓடவே அஞ்சினேன்.. முகமது ஷமி உருக்கம்

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடிந்து விடும் என்று தாம் அஞ்சியதாக பிரபல வேகப் பந்துவீச்சாளர் முகமது சாமி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது சமி கடைசியாக 2023ஆம் ஆண்டு 50 உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடினார்.

அதன் பிறகு முகமது சமி காயத்தால் அவதிப்பட்ட நிலையில், தற்போது ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிருக்கிறார். பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக சமி தயாரான நிலையில் மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த சூழலில் தற்போது ஷமி 100% உடல் தகுதியை எட்டி இட்டிருக்கிறார். இது குறித்து முகமது சமி அளித்துள்ள பேட்டியில் தான் எவ்வாறு கடினமான காலத்தை கடந்து வந்தேன் என்பது குறித்து பேசி இருக்கிறார். அதில் நாம் ரன்கள் அடிக்கும் போதும், விக்கெட்டுகள் எடுக்கும் போதும் பலரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

ஆனால் உண்மையான சோதனையை நமது கடின காலத்தில் நம்முடன் யார் இருக்கிறார் என்பதில் தான் இருக்கிறது. ஒரு ஆண்டு முழுவதும் நான் இந்த தருணத்திற்காக காத்திருந்தேன். முழு உடல் தகுதியைப் பெற வேண்டும் என நான் கடுமையாக உழைத்தேன். ஒரு கட்டத்தில் பயிற்சியில் ஓடும் போது கூட எனக்கு காயம் அடைந்து விடுமோ என பயம் வந்து விட்டது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால், அதிலிருந்து மீண்டு வருவது என்பது கடினமான விஷயம் தான். தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று தங்களுடைய உடல் தகுதியை மீட்க அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் காயம் அடைந்து மீண்டும் கம்பேக் கொடுக்கும் போது ஒரு விளையாட்டு வீரராக நான் வளர்ந்து வருகிறேன் என்பதை உணர்ந்தேன்.

ஏனென்றால் ஒரே விஷயத்தை நாம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். இதன் மூலம் நமது மன வலிமை அதிகரிக்கும். என்ன செய்ய வேண்டுமோ நான் அதை செய்து முடித்து விட்டேன். என்னுடைய கடினமான காலகட்டத்தை நான் கடந்து வந்து விட்டேன். நீங்கள் கடுமையாக உழைத்தால் நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த முடிவை அடைய முடியும். இதை தான் நான் நம்புகிறேன். நீங்கள் பட்டம் விட்டாலும் சரி, காரை ஓட்டினாலும் சரி, பந்து வீசினாலும் சரி உங்களை நீங்கள் முதலில் நம்புங்கள். அப்போதுதான் உங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று முகமது சமி கூறியுள்ளார்.

Story first published: Wednesday, January 22, 2025, 15:13 [IST]
Other articles published on Jan 22, 2025
English summary
Mohammed Shami's recovery from injury highlights his resilience and mental strength, emphasising the significance of perseverance and support in sports.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+