Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்க Bazball இப்போ விளையாடுங்க? Bore கிரிக்கெட் ஆடுறீங்களா? ENG வீரர்களை கிண்டலடித்த இந்திய வீரர்கள்

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டை இங்கிலாந்து அணி வீரர்கள் ,ஒருநாள் டி 20 போட்டிகள் போல் விளையாடுவார்கள்.

இதனை பேஸ் பால் என்று அந்நாட்டு ஊடகம் அழைக்கும். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான இருக்கும் யுக்தியை பின்பற்றாமல் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ப்பார்கள். இதன் காரணமாக ஒரே நாளில் 400 ரன்களுக்கு மேல் அடிக்கும் பழக்கத்தை இங்கிலாந்த அணி வைத்திருந்தது.

Indian Players sledging

இங்கிலாந்து அணிக்கு பல வெற்றிகளை கொடுத்தாலும் சில போட்டிகளில் தோல்வியும் அந்த அணிக்கு கொடுத்திருக்கின்றது. இதனால் இந்த விளையாட்டு முறை மீது பல விமர்சனங்கள் இருந்துள்ளது. இந்த சூழலில் இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கும் ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருந்தது.

ஆனால் இந்திய வீரர்களும் அதிரடியாக விளையாடி இருக்கிறார்கள். இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த நிலையிலும், இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடாமல் மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

அதாவது டெஸ்ட் போட்டிக்கான உரிய ஆட்டத்தை இங்கிலாந்து வீரர்கள் விளையாடினார்கள். இதை பார்த்தவுடன் ரசிகர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இதற்கு காரணம் இந்தியா அபாரமாக விளையாடி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்ததால், பேஸ் பால் திட்டத்தை மாற்றி இங்கிலாந்து மெதுவாக விளையாடுவதாக கிரிக்கெட் வல்லுனர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் இங்கிலாந்தின் இந்த ஆட்டத்தை இந்திய வீரர்கள் கிண்டல் செய்தனர். களத்தில் விளையாடிக் கொண்ட போது முகமது சிராஜ் பேஸ்பால், பேஸ் பால் எங்கே? நான் பேஸ் பாலை பார்க்க வேண்டும். அது போல் விளையாடுங்களேன் கொஞ்சம் பாருங்க என்று கேட்டார். இதனை தொடர்ந்து இங்கிலாந்து வீரர்களை கிண்டல் செய்த இந்திய அணி கேப்டன் கில், இனி பொழுதுபோக்குக்கான கிரிக்கெட் கிடையாது. பழைய மாதிரி போரிங் கிரிக்கெட்டை இங்கிலாந்து விளையாடுகிறார்கள் என கிண்டல் அடித்தனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Story first published: Thursday, July 10, 2025, 23:09 [IST]
Other articles published on Jul 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+