Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: சிராஜ் எடுத்த ஒரே முடிவால் தலைக்கீழ் மாறிய ஆட்டம்.. மீண்டும் போட்டிக்குள் வந்த இந்தியா

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற வருகிறது. இந்த சூழலில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே ஸ்கோரை அடித்து சமநிலையில் இருக்கிறது.

இதனால் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்தை விரைவில் சுருட்டி இலக்கை ஷேஸ் செய்ய வேண்டும் என இந்திய அணி உத்வேகத்தில் இருக்கிறது. அதேசமயம் இங்கிலாந்து அணி பெரிய இலக்கை நிர்ணயித்து இந்தியாவின் 10 விக்கெட்டை எடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் உள்ளது.

Siraj Shubman gill

இதனால் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது போன்ற சூழலில் இங்கிலாந்து அணியில் ஒவ்வொரு விக்கெட்டும் மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு விக்கெட் இழப்பின்றி என்ற ஸ்கோருடன் நான்காவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்தது.

இந்த தருணத்தில் சிராஜ் டக்கட் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதேபோன்று முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ஆலி போப் களத்திற்கு வந்தார். போப் இன்னிங்சை கட்டமைப்பதில் வல்லவர். இதனால் அவருடைய விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டிய உத்வேகத்தில் இந்திய அணி இருந்தது. அப்போது சிராஜ் வீசிய பந்து ஆலி போப் காலில் பட்டது.

ஆனால் அதற்கு நடுவர் அவுட் தரவில்லை. திடீரென்று லார்ட்ஸ் மைதானத்தில் பந்து எகிற்வதால் பந்தில் பவுன்ஸ் அதிகமாக இருக்கும். அதிர்ஷ்டத்தை மிஸ் செய்யும் என்று பலரும் நினைத்தனர். இதனால் டிஆர்எஸ் எடுக்க கில் மறந்துவிட்டார். ஆனால் விடாப்படியாக சிராஜ் கண்டிப்பாக பந்தின் பவுன்ஸ் அதிகமாக இருக்காது.

இது நிச்சயம் ஸ்டெம்பை தாக்கி இருக்கும். எனவே டி ஆர் எஸ் எடு என்று கூறினார். இதை அடுத்து சிராஜின் பேச்சைக் கேட்டு கில் டி ஆர் எஸ் முடிவை எடுத்தார். அதைப்போல் ரிப்ளேவிலும் பந்து ஸ்டெம்பை தான் தாக்கும் என்கின்ற கணிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து ஆலி போப்க்கு மூன்றாம் நடுவர் அவுட் தந்தார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

Story first published: Sunday, July 13, 2025, 19:27 [IST]
Other articles published on Jul 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+