Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: நம்பிக்கையை ஏற்படுத்திய கூகுள் வால் பேப்பர்.. வெற்றி பெற்றது குறித்து சிராஜ் நெகிழ்ச்சி

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது சிராஜ் முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் நடப்பு தொடரில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் சிராஜ் பெற்று இருக்கிறார். கடைசி டெஸ்ட் சிறப்பாக விளையாடிய சிராஜுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Mohammed Siraj

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிராஜ், இந்த வெற்றி உண்மையிலே மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியும் அளிக்கின்றது. முதல் நாளிலிருந்து நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தோம். அதற்கான முடிவை தான் நாங்கள் தற்போது பார்க்கின்றோம். நாங்கள் பெரிய அளவு பிளான் எல்லாம் போடவில்லை.

திட்டத்தை சிம்பிளாக வைத்துக்கொண்டு சரியான இடத்தில் பந்து வீசினோம். விக்கெட்டுக்காக கடுமையாக முயற்சி செய்யாமல் தொடர்ந்து ஒரே மாதிரி செயல்பட்டோம். எனக்கு விக்கெட்டுகள் கிடைத்தால் அது போனஸ். இல்லையென்றால் நான் பேட்ஸ்மேனுக்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம்.

இன்று நான் எழுந்த உடனே என்னால் அணிக்கு வெற்றியைத் தேடித் தர முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. கூகுளில் இருந்து என்னால் முடியும் என்ற மொபைல் வால்பேப்பரை டவுன்லோட் செய்து அதை என் மொபைலில் செட் செய்து இருந்தேன். நான் மட்டும் சரியாக ஹாரி புரூக் கேட்சை பிடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது.

அது ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனை ஆனது. அதை பயன்படுத்திக்கொண்டு புரூக், சிறப்பாக விளையாடினார். ஆக்ரோஷமாக விளையாடிய புரூக்கிற்கு அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நாங்கள் தோற்றது என்னுடைய இதயத்தை நொறுக்கியது.

என்னுடைய பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜடேஜா பேட்டை நேராக வைத்து விளையாடு என்று கூறினார்.
மேலும் உன்னுடைய தந்தை உன்னை இவ்வளவு தூரம் கொண்டு வர எவ்வளவு முயற்சி செய்திருப்பார் என்பதை நினைத்துப் பார்த்து களத்தில் நில் என்று கூறினார். தற்போது இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது என்று சிராஜ் கூறியுள்ளார்.

Story first published: Monday, August 4, 2025, 17:57 [IST]
Other articles published on Aug 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+