Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: நீ தான் உண்மையான மனுசன்.. அதிர்ஷ்டத்தால் நாம் வென்றோம் என உண்மையை ஒப்புக்கொண்ட பனேசர்

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் செய்தது. குறிப்பாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆறு ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் அதில் தோல்வியை தழுவியதால் தொடரை இந்தியா சமன் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.இந்த சூழலில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் அதிர்ஷ்டம் காரணமாக தான் இங்கிலாந்து அணி இந்த தொடரை சமன் செய்தது.

Monty Panesar

இல்லை என்றால் தோல்வியை தழுவி இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஐபிஎல் போன்ற பணிச்சுமை நிறைந்த தொடரை விளையாடிவிட்டு இந்தியா அணி வீரர்கள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் விளையாடி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு தருணத்திலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி சமன் செய்தது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் போட்டி எப்படி வேண்டுமானாலும் முடிந்திருக்கலாம். அந்த போட்டிக்கு இந்தியா தான் நிச்சயம் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.

ஆனால் அதிர்ஷ்டம் காரணமாகத்தான் இங்கிலாந்து அணி அந்த போட்டியில் வென்றது. சிராஜ் விக்கெட் அதிர்ஷ்டத்தால் கிடைத்தது. இதேபோன்று ஓவல் மைதானத்திலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். கடைசி நாளில் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதனால் தொடரை வென்றது போல் அந்த தருணம் இந்தியாவுக்கு மாறிவிட்டது. அஸ்வின், ரோகித், கோலி போன்ற வீரர்கள் இல்லாமல் இந்தியா இங்கிலாந்தில் அபாரமாக விளையாடி இருப்பது இந்திய அணி எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது. அதேபோன்று பும்ரா இல்லாமலையும் இந்தியா வெற்றி பெற தொடங்கி விட்டது. இது எதிர்காலத்தில் சிராஜை சுற்றி பந்துவீச்சு படையை இந்திய அணி உருவாக்க வேண்டும் என்றும் மாண்டி பனேசர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, August 7, 2025, 20:46 [IST]
Other articles published on Aug 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+