For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"இந்த பவுலரை முதல் மேட்ச்சில் இருந்தே டீமில் சேர்த்திருக்கணும்".. இந்திய அணிக்கு பனேசர் அட்வைஸ்

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பளிக்கப்படாதது தமக்கு ஆச்சரியமளிப்பதாக முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணிக்கு முதல் முறையாக அழைக்கப்பட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப்பிற்கு பதிலாக, பிரசித் கிருஷ்ணா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோருக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை அளித்துள்ளது.

தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்நிலையில், நான்காவது டெஸ்டில் அர்ஷ்தீப் சிங்கை கண்டிப்பாக களமிறக்க வேண்டும் என மான்டி பனேசர் வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்தின் ஆடுகளச் சூழல்கள் அவருக்கு சாதகமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அர்ஷ்தீப் சிங் இதுவரை 21 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 66 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், இதுவரை சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆகவில்லை.

IND vs ENG Monty Panesar Surprised by Arshdeep Singh s Exclusion Urges India to Play Him in 4th Test

இதுகுறித்து மான்டி பனேசர் கூறுகையில், "அர்ஷ்தீப் சிங் இந்த தொடரில் விளையாட வேண்டும். தொடரின் முதல் டெஸ்டில் அவர் விளையாடாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர், அவர் இந்திய அணிக்கு ஒரு நல்ல தேர்வாக இருந்திருப்பார். இந்த இங்கிலாந்து சூழல்களில் அவர் சிறப்பாக செயல்படுவார்" என்று தெரிவித்தார்.

மேலும், அடுத்து நடைபெற உள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவையும் பிளேயிங் லெவனில் பார்க்க விரும்புவதாக மான்டி பனேசர் கூறியுள்ளார். "அடுத்த போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான 'வாழ்வா சாவா' ஆட்டம், இதில் ஜஸ்பிரித் பும்ரா நிச்சயம் விளையாட வேண்டும். மான்செஸ்டர் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும், அங்கு வேகமும், பவுன்சும் இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ரா விளையாடுவது குறித்து இந்திய அணி நிர்வாகம் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. மான்செஸ்டரில் போட்டி தொடங்குவதற்கு முன்பு பும்ராவின் தேர்வு குறித்து அணி இறுதி முடிவு எடுக்கும். இதுபற்றி அணி நிர்வாகம் சார்பாக கூறுகையில், "இந்த டெஸ்ட் தொடர் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது, ஆனால், நாங்கள் மான்செஸ்டரில் பும்ரா ஆடுவது பற்றிய முடிவை எடுப்போம். நாங்கள் முழு தொடரின் முடிவு எப்படி இருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்" என்று கூறியுள்ளது.

லார்ட்ஸில் நடந்த டெஸ்டில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் இந்திய அணி பெரும் அழுத்தத்தில் உள்ளது. எனவே, தங்களது சிறந்த பிளேயிங் லெவனை தேர்ந்தெடுப்பதற்கு முன் இந்திய அணி நிர்வாகம் பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

Story first published: Saturday, July 19, 2025, 8:15 [IST]
Other articles published on Jul 19, 2025
English summary
IND vs ENG: Monty Panesar Surprised by Arshdeep Singh's Exclusion, Urges India to Play Him in 4th Test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+