Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை அதிக விக்கெட் பட்டியல் - மிரள வைத்த ஷமி.. எல்லா பவுலர்களையும் தூக்கி அடித்த பும்ரா

லக்னோ : 2023 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் இந்திய அணியை சேர்ந்த பும்ரா, ஷமி ஆதிக்கம் செலுத்தி உள்ளனர்.

இந்திய அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளர் பும்ரா அதிரடியாக பல வீரர்களை முந்தி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் 3 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஷமி இரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடி 9 விக்கெட் வீழ்த்தி மிரள வைத்துள்ளார். தற்போது இந்த வரிசையில் அவர் பின்த்னகி இருந்தாலும், இன்னும் மூன்று லீக் போட்டிகளில் அவர் ஆடினாலே மற்ற அனைவரையும் முந்தி முதல் இடத்துக்கு வந்து
விடுவார்.

IND vs ENG - Most wickets in the ICC World Cup 2023 - Shami impress, Bumrah threw away all

முகமது ஷமி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இரண்டு போட்டிகளில் 102 பந்துகள் வீசி 9 விக்கெட்கள் வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மிக மிகக் குறைந்த பந்துவீச்சு சராசரி வைத்துள்ளவர் முகமது ஷமி தான். அவர் 8.44 பந்துவீச்சு சராசரி வைத்துள்ளார். பந்துவீச்சு சராசரி என்பது ஒரு விக்கெட்டுக்கு எத்தனை ரன்கள் வரை அவர் விட்டுக் கொடுத்துள்ளார் என்கிற சராசரி கணக்கு ஆகும். அந்த வகையில் மற்ற எல்லோரையும் விட மிகக் குறைவான ரன்கள் கொடுத்து அதிக விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார் ஷமி.

உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா 16 விக்கெட்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். பும்ரா 14 விக்கெட்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். லீக் சுற்றின் முடிவில் ஜம்பாவை, பும்ரா முந்த அதிக வாய்ப்பு உள்ளது.

நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னர் 14 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தாலும், பந்துவீச்சு சராசரி அடிப்படையில் பும்ராவை விட பின்தங்கி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சென் 13, பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி 13 விக்கெட்கள் வீழ்த்தி அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர்.

ஷமி தற்போது 9 விக்கெட்கள் வீழ்த்தி 14 வது இடத்தில் இருந்தாலும் அவர் விக்கெட் வீழ்த்தும் வேகத்துக்கு இன்னும் இரண்டு போட்டிகளில் முதல் இடத்தை பிடித்தாலும் அதில் ஆச்சரியம் இல்லை.

Story first published: Monday, October 30, 2023, 7:00 [IST]
Other articles published on Oct 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+