Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் கொஞ்சம் கூட ஈகோ இல்ல..ராகுல் செய்ததை பாருங்க..வீடியோவை பார்த்து பாராட்டிய நாசர் உசேன்

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். லீட்ஸ் நகரில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய தொடக்க வீர ராகுல் 42 ரன்களில் ஆட்டம் இழக்க, சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதேபோன்று தன்னுடைய முதல் போட்டியில் கேப்டனாக களமிறங்கிய கில் சதம் அடித்து அசத்தினார்.

India cricket team

இந்திய அணியில் துணை கேப்டனான ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். இந்த சூழலில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது. ஆட்டத்தை முடித்துக்கொண்டு கில், ரிஷப் பண்டும், ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வந்தனர். அப்போது இந்திய அளவில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் வாசலில் நின்று கொண்டு வீரர்களை வரவேற்றனர். அப்போது இந்திய அணியின் நட்சத்திர வீரரான ராகுல் கேப்டன் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் ராகுல் இந்த இரண்டு வீரர்களுக்காக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஒரு படி மேல் சென்ற பண்ட், ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வந்தவுடன் கையை எடுத்து கும்பிட்டு அவரை வரவேற்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை சுட்டிக்காட்டிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன், இந்திய அணியின் ஒவ்வொரு வீரர்களும் எவ்வாறு ஈகோ இல்லாமல் இருக்கிறார்கள்.

ஒரு வீரரின் வெற்றியை மற்றொருவர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்று பாருங்கள். ஒரு அணியின் வெற்றிக்கு இதுதான் மிகவும் முக்கிய காரணமாக இருக்கும். அணியில் உள்ள வீரர்கள் மற்றவர்களுக்காக சந்தோஷமாக இருக்க வேண்டும்.
இதன் மூலம் அணியின் ஒற்றுமை சிறப்பாக இருக்கிறது. இது ஒரு நீண்ட தொடர். இந்த வீரர்களின் ஒற்றுமை தான் இந்த நெருக்கடியை சமாளிக்க அவர்களுக்கு உதவும். இந்திய அணியின் புதிய அத்தியாயம் சிறப்பாக தொடங்கி இருக்கிறது என்று அவர் பாராட்டியுள்ளார்.

Story first published: Saturday, June 21, 2025, 16:27 [IST]
Other articles published on Jun 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+