Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

500 விக்கெட்டுகளுடன் நிற்காது.. இன்னும் நிறைய வரும்.. அஸ்வின் குறித்து ஆஸ்திரேலிய வீரர் கணிப்பு

Ashwin : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வீரர் அஸ்வின் 500 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை எட்டி சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் குறைந்த போட்டியில் அதிவேகமாக இந்த சாதனையை எட்டிய இந்திய வீரர் மற்றும் உலகில் இரண்டாவது வீரர் என்ற பெருமையும் அஸ்வினுக்கு கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த 500 விக்கெட் மைல்கல்லை எட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் லயான், தற்போது அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

Ind vs Eng - Nathan lyon predicts about R Ashwin and legends wishes him

அதில் , அஸ்வின் உங்களுடைய 500 விக்கெட் என்ற மைல் கல்லை எட்டியதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். உங்களுடைய இந்த வெற்றிப் பயணத்தை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றேன். உங்கள் மீது எனக்கு அவ்வளவு மரியாதை இருக்கிறது. உங்களுக்கு எதிராக நான் விளையாடியதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

அது மட்டும் இல்லாமல் உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கின்றேன். வாழ்த்துக்கள் இன்னும் நிறைய விக்கெட்டுகள் உங்களுக்கு வந்து சேரும் என்று நாதன் லயான் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார். இதே போன்று தற்போது அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் அணில் கும்ப்ளேவும் அஸ்வின் ஒரு சாம்பியன் வீரர் என்றும், கற்றலை என்றுமே நிறுத்தாத ஒரு சாம்பியன் என்று பாராட்டிருக்கிறார்.

இந்த 500 விக்கெட் கிளப்பில் இன்னொரு ஒரு இந்தியன் வந்து இணைந்திருப்பது மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். அஸ்வினுடன் விளையாடிய தினேஷ் கார்த்திக் அஸ்வின் ஒரு மிகப்பெரிய உச்சத்தை தொட்டு கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

சென்னையில் இருந்து கிரிக்கெட்டின் உயரத்திற்கு அஸ்வின் சென்ற இந்த பயணத்தை பாராட்டுவதாக அவர் கூறியிருக்கிறார்.இதேபோன்று அஸ்வினை வாழ்த்தியுள்ள சுரேஷ் ரெய்னா அஸ்வின் இந்த சுழற் பந்துவீச்சு பயணம் அனைவரையும் உற்சாகப்படுத்துவதாக கூறியுள்ளார். தொடர்ந்து இதே போல் செயல்படுங்கள் என்றும் அவர் பாராட்டி இருக்கிறார்.

Story first published: Friday, February 16, 2024, 21:25 [IST]
Other articles published on Feb 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+