For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அள்ளிப்போட்டு கொண்டு வந்துருக்காங்க.. ஒரே போட்டியில் இத்தனை சாதனைகளா.. இந்திய அணியின் ரெக்கார்ட்ஸ்!

ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தரப்பில் படைக்கப்பட்ட சாதனைகளின் முழு விவரங்களை பார்க்கலாம்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் ஜடேஜாவின் அபார சதம் காரணமாக 445 ரன்களை குவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி பென் டக்கெட்டின் அபார சதத்தால் 319 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றது.

IND vs ENG : Number of Records broken by Indian team in the 3rd Test against England at Rajkot

இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 430 ரன்களை குவித்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றிபெற 557 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 214* ரன்களும், சுப்மன் கில் 91 ரன்களும், சர்பராஸ் கான் 68 ரன்களும் விளாசினர். இந்த போட்டியின் மூலமாக இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

அதன்படி இந்த இன்னிங்ஸில் மட்டும் இந்திய அணி மொத்தமாக 18 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளது. முன்னதாக 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி தரப்பில் 15 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. அதனை இந்திய அணி முறியடித்துள்ளது. அதேபோல் 2019ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 27 சிக்சர்கள் விளாசப்பட்டது.

அதுவே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடித்த அதிக சிக்சர்களாகும். இந்த சாதனை இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முறியடிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் 10 சிக்ஸ், இரண்டாவது இன்னிங்ஸில் 18 சிக்ஸ் என்று மொத்தமாக 28 சிக்சர்களை விளாசப்பட்டுள்ளது. அதேபோல் இந்த தொடரில் இதுவரை 48 சிக்சர்கள் விளாசப்பட்டுள்ளது. இதுவரை இந்திய அணி தரப்பில் 2019ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 47 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது.

அதேபோல் ஒரே டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் இந்திய அணி 400 ரன்களை 3வது முறையாக குவித்துள்ளது. இதற்கு முன் 2005ஆம் ஆண்டு கொல்கத்தா டெஸ்ட் போட்டியிலும், 2009ஆம் ஆண்டு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி இரு இன்னிங்ஸ்களிலும் 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.

அதேபோல் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை விளாசிய இடதுகை பேட்ஸ்மேன்கள் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதற்கும் 2005ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சவுரவ் கங்குலி 537 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்தது. அதனை ஜெய்ஸ்வால் இந்த டெஸ்ட் தொடரில் 545 ரன்கள் சேர்த்து முறியடித்துள்ளார்.

Story first published: Sunday, February 18, 2024, 14:18 [IST]
Other articles published on Feb 18, 2024
English summary
IND vs ENG : What are the 6 Records broken by Indian team in the 3rd Test against England at Rajkot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+