96 ரன்கள் எடுத்தால் போதும்.. மாபெரும் உலக சாதனை படைக்கப் போகும் கோலி.. சச்சின் ரெக்கார்டுக்கு குறி
நாக்பூர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி 96 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் மிகப்பெரிய மைல்கல் சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 13,906 ரன்களை அடித்து இருக்கிறார்.
283 இன்னிங்ஸ்களில் அவர் 136 ரன்களை 58.18 என்ற பேட்டிங் சராசரியுடன் எடுத்து இருக்கிறார். 50 சதங்கள் மற்றும் 72 அரை சதங்களை அடித்து இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் விராட் கோலி வசமே உள்ளது. 2018 ஆம் ஆண்டு விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

அந்த மைல்கல்லை விரைவாக எட்டிய வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார். அதேபோல தற்போது அவர் 96 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் 14,000 ஒரு நாள் ரன்களை விரைவாக எட்டிய வீரர் என்ற உலக சாதனையை படைப்பார். இதுவரை இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே 14,000 ஒரு நாள் போட்டி ரன்களை எடுத்துள்ளனர்.
ஒருவர் சச்சின் டெண்டுல்கர்; மற்றொருவர் குமார் சங்ககாரா. சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்ஸ்களிலும், சங்ககாரா 378 இன்னிங்ஸ்களிலும் இந்த மைல்கல் சாதனையை எட்டி இருந்தனர். தற்போது விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் ஆடி இந்த இலக்கை எட்டுகிறார் என வைத்துக் கொண்டாலும் 286 இன்னிங்ஸ்களிலேயே இந்த இலக்கை எட்டி சச்சின் சாதனையை முந்துவார் கோலி.
விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் சமீப காலமாக மோசமாக உள்ளது. அதுதான் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி மோசமாக ஆட்டம் இழந்து வந்த நிலையில் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடினார்.
அதிலும் அவர் 6 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் அரை சதம் அல்லது சதம் அடித்து ஃபார்மை மீட்பாரா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.


Click it and Unblock the Notifications