Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இந்த ஒரு விக்கெட்டை வீழ்த்தினால், எங்கள் வெற்றி உறுதி.. இங்கிலாந்து வீரர் கருத்து

லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கின்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் அடித்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பும்ராவின் அபார பந்துவீச்சு காரணமாக 465 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருக்கிறது.

Ollie Pope

தற்போது இந்திய அணி 96 ரன்கள் முன்னிலை வகுக்கின்றது. கைவசம் எட்டு விக்கெட்டுகள் இருக்க இந்திய அணி நாளை முழுவதும் விளையாடி 350 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றது. இந்த சூழலில் இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து வீரர் ஆலி போப், இந்திய அணி வெயில் இருக்கும் போது விளையாடியதால் அவர்களுக்கு ரன் குவிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் நாங்கள் பேட்டிங் செய்தபோது மேகமூட்டம் இருந்தது. எனவே என்னுடைய சதம் கொஞ்சம் கடினமாக தான் இருந்தது. நான் இந்திய வீரர்கள் வீசிய நல்ல பந்திற்கு மரியாதை கொடுத்து விளையாடினேன். மோசமான பந்துகளை அடித்து ரன்களை சேர்த்தேன். இந்த ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆடுகளத்தில் நல்ல பவுன்ஸ் இருந்தது. அது மட்டும் இல்லாமல் பவுண்டரி லைன் அருகே பந்து சென்றால், வேகமாக நகரும். மேலும் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆகும். எனவே பேட்டிங் செய்யும்போது ஷாட்டுகளை தாமதமாக ஆட வேண்டும். பந்து ஸ்விங் ஆகும் போது ஸ்கொயர் திசையில் நான் ரன்கள் அடித்தேன்.

நான் கடைசியாக இந்தியாவில் விளையாடும் போது நன்றாக பேட்டிங் செய்யவில்லை. தற்போது நான் ரன்கள் சேர்த்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் சதம் அடித்தாலோ இல்லை டக் அவுட் ஆனாலும் அதை அப்படியே மறந்து விட்டு மீண்டும் அனைத்தையும் புதிதாக ஆரம்பிப்பேன். எங்கள் அணியின் வெற்றியை பொருத்தவரை நாளை கே எல் ராகுல் விக்கெட்டை நாங்கள் விரைவில் வீழ்த்த வேண்டும்.

அது எங்களுக்கு ஒரு முக்கியமான விக்கெட் ஆகும். நாங்கள் எவ்வளவு இலக்கு ஷேஸ் செய்யப் போகிறோம் என்பது குறித்து நினைத்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. எவ்வளவு குறைவான இலக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும். இன்னர் சர்க்கிகளைத் தாண்டினாலே பந்து பௌண்டரிக்கு செல்லும் என்பதால் கவலை இல்லை என ஆலி போப் கூறினார்.

Story first published: Sunday, June 22, 2025, 23:59 [IST]
Other articles published on Jun 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+