Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கண்ணை மூடிக்கொண்டு ஆடவில்லை".. முறையாக திட்டமிட்டு தாக்கிய பண்ட்.. இது வேற மாதிரி மெசேஜ்.. ப்பா!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியை மிகப்பெரிய சரிவில் இருந்து மீட்டு இருக்கிறார் அதிரடி வீரர் பண்ட். இவரின் பேட்டிங் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

இங்கிலாந்து இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்கள் எடுத்தது.

அதன்பின் இங்கிலாந்து பவுலர்கள் இந்தியாவின் டாப் ஆர்டரை எளிதாக விக்கெட் எடுத்து சரித்தனர். இந்திய அணியில் ரோஹித் 6, கோலி 11, கில் 29, ரஹானே 1 ரன்னிற்கு எடுத்த நிலையில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளனர்.

 ஆனால் என்ன

ஆனால் என்ன

இதனால் இந்த அணி 73 ரன்களை எடுத்து இருந்த போதே 4 விக்கெட்டை இழந்தது. இதனால் இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து பாலோ ஆன் ஆகிவிடும் என்று பலரும் நினைத்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 378 ரன்களை எடுக்கவில்லை என்றால் பாலோ ஆன் ஆகிவிடும்.

 கவனம்

கவனம்

இதனால் இந்திய அணி பாலோ ஆன் பெறுமோ என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் இந்திய அணிக்காக தற்போது இறங்கி ஆடி வரும் பண்ட் மொத்தமாக இங்கிலாந்து அணியின் பிளான் அனைத்தையும் காலி செய்து உள்ளது. கோலிக்கு பின் களமிறங்கிய பண்ட் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடி வருகிறார். பவுண்டரி அடித்துதான் இவர் முதல் ஓவரையே எதிர்கொண்டார் .

ஸ்பின்

ஸ்பின்

முக்கியமாக ஸ்பின் பவுலர்களை எதிர்கொண்டு பண்ட் அதிரடியாக ஆடினார்.இடது கை ஸ்பின் பவுலர் ஜாக் லீச் ஓவரை தேடி தேடி பண்ட் விளாசினார். இன்று 6 ஓவர்கள் வீசிய லீச் பவுலிங்கில் மட்டும் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசினார். வெறும் 44 பந்திலேயே பண்ட் இதன் மூலம் அரைசதம் எடுத்தார்.

எத்தனை

எத்தனை

அதிலும் லீச் போட்ட 6 ஓவரில் மட்டும் 59 ரன்கள் சென்றது. கிட்டத்தட்ட டெஸ்ட் மேட்சில் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் சென்றது. பண்ட் இந்த போட்டியில் கண்ணை மூடிக்கொண்டு ஆடவில்லை . முறையாக திட்டமிட்டு அடித்தார். எந்த பாலை அடிக்க வேண்டும், எதை விட வேண்டும் என்று திட்டமிட்டு அடித்தார். இதன் மூலம் இந்திய அணியில் தனது இடம் நிரந்தரம் என்ற மெசேஜை வலுவாக அனுப்பி உள்ளார்.

சிறப்பு

சிறப்பு

ஆஸ்திரேலியாவின் லைனுக்கு எதிராக பண்ட் எப்படி ஆடினாரோ அதேபோல் இப்போதும் ஆடினார். லைன், லீச் இருவரும் பார்க்கவும் ஒரே மாதிரி இருப்பதால் பண்ட் இரண்டு பேரையும் ஒரே மாதிரி பொளந்து இருக்கிறார். போக போக பிட்ச் மோசமாகும். பவுலிங் செய்ய சாதகம் ஆகும்.

தடுக்க முடிவு

தடுக்க முடிவு

இதனால் பிட்ச் நன்றாக இருக்கும் போதே அதிரடியாக ஆட வேண்டும் என்று பண்ட் திட்டமிட்டு சிறப்பாக ஆடி உள்ளார். இவரின் ஆட்டம் பெரிய அளவில் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு உள்ளது. தற்போது வரை 64 பந்தில் 4 சிக்ஸ், 7 பவுண்டரி என்று 68 ரன்கள் எடுத்து பண்ட் அவுட்டாகாமல் ஆடி வருகிறார்.

Story first published: Sunday, February 7, 2021, 22:04 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+