Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்போதும் சந்தோசமாக சிரித்து பேசுவார்.. தலையை குனிந்தபடி உட்கார்ந்த பண்ட்.. பின்னணியில் ஷாக் காரணம்

சென்னை: எப்போதும் சிரித்து சந்தோசமாக இருக்கும் பண்ட் நேற்று காலை டிரெஸ்ஸிங் ரூமில் சோகமாக அமர்ந்து இருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இந்தியாவிற்கு இங்கிலாந்து 419 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. இன்று புஜாரா, சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கி ஆடி வருகிறார்கள்.

 சந்தோசம்

சந்தோசம்

இந்த நிலையில் எப்போதும் சிரித்து சந்தோசமாக இருக்கும் பண்ட் நேற்று காலை டிரெஸ்ஸிங்கில் ரூமில் சோகமாக அமர்ந்து இருக்கிறார். அதேபோல் நேற்று மாலை இந்திய அணி பேட்டிங் செய்த ஒரு மணி நேரமும் பண்ட் மிகவும் சோகமாகவே காணப்பட்டு உள்ளார். யாரிடமும் பெரிதாக பேசவில்லை.

என்னாச்சு

என்னாச்சு

நேற்று மாலை நேரத்தில் போட்டி முடிந்த பின் வீரர்கள் எல்லோரும் ஓய்வு எடுக்க சென்றனர். ஆனால் பண்ட் சில நிமிடம் பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். கீப்பிங் மற்றும் பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறார். இதற்கு இரண்டு விதமான காரணங்கள் சொல்லப்படுகிறது.

காரணம் 1

காரணம் 1

அதன்படி பண்ட் இரண்டு இன்னிங்சிலும் கீப்பிங் செய்யும் போது பல இடங்களில் சொதப்பினார். ஒரு கேட்சை விட்டார். தேவையின்றி ஒரு பவுண்டரி விட்டார். ஸ்டம்பிங் செய்வதை தவறவிட்டார். இவரின் கீப்பிங் காரணமாக கோலி, அஸ்வின் போன்றவர்கள் இவர் மீது கோபம் அடைந்தனர்.

வருத்தம்

வருத்தம்

இதனால் கோலி வருத்தமாக இருந்துள்ளார். இவரின் வருத்தத்திற்கு இன்னொரு காரணமும் இருந்துள்ளது. அதன்படி பண்ட் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும் போது கடைசி கட்டத்தில் அவசரப்பட்டு ஆடி அவுட்டானார் . 90 ரன்கள் அடித்துவிட்டு பண்ட் இப்படி அவுட் ஆவது இது நான்காவது முறை.

கூடுதல் நேரம்

கூடுதல் நேரம்

நேற்று பண்ட் கூடுதல் நேரம் பேட்டிங் செய்து இருந்தால் இன்னும் அதிக ரன் எடுத்து இருக்கலாம். இந்த வருத்தமும் பண்டிற்கு இருந்ததாக கூறுகிறார்கள். அவசரப்பட்டு அவுட்டாகிவிட்டோமே என்று பண்ட் வருத்தத்தில் இருந்தார் என்கிறார்கள். இதனால் இன்று இன்னும் அவர் பொறுப்பாக ஆடுவார் என்று கூறப்படுகிறது.

Story first published: Tuesday, February 9, 2021, 10:06 [IST]
Other articles published on Feb 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+