For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிக ரன்களை விட்டு கொடுத்தது ஏன் தெரியுமா? தவறிலிருந்து பாடம் கற்பேன்.. பிரசித் கிருஷ்ணா கருத்து

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 371 ரன்கள் நிர்ணயித்தும் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இதற்கு காரணம் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக அளவு ரன்களை விட்டுக் கொடுத்தது காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட வீரர்களை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், தான் செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் பிரசித் கிருஷ்ணா முதல் இன்னிங்சில் 20 ஓவரில் 128 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 15 ஓவர்கள் 92 ரன்களும் விட்டுக்கொடுத்து மொத்தமாக ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

Prasidh Krishna

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "நான் செய்த தவறு எனக்கு ஏமாற்றம் அளிக்கின்றது. நான் அதிக அளவு ரன்களை விட்டுக் கொடுத்தேன். அடுத்த போட்டியில் இந்த தவறை செய்ய மாட்டேன். ரன்களை அதிக அளவு விட்டுக் கொடுப்பதை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து உழைத்து வருகின்றேன்."

"நான் செய்த தவறு தான் இதற்கு காரணம் என்னுடைய பொறுப்புகளை உணர்ந்து நான் இன்னும் சிறப்பாக பந்து வீச முயற்சி செய்வேன். அதற்கான பணியை நான் செய்து வருகின்றேன். நிச்சயமாக அடுத்த டெஸ்ட் போட்டியில் நான் நன்றாக செயல்படுவேன். ஒவ்வொரு முறையும் பந்து வீசும் வரும் போது மெய்டன் ஓவர் வீசும் வேண்டும் என்று தான் வீரர்கள் வருவார்களே தவிர அதிக பவுண்டரிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள்."

"முதல் டெஸ்ட் போட்டியில் நான் அதிக அளவு ஷாட் பந்துகளை வீசினேன். அப்போது பந்து என்ஜாய் தான் பௌண்டரிக்கு சென்றது. எனவே இதுதான் என்னுடைய எக்கனாமி ரேட் அதிகமானதிற்கு காரணம். நாங்கள் முதல் போட்டியில் தோல்வியை தழுவினாலும் எங்கள் அணி வீரர்கள் நல்ல மனநிலையுடன் மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள்."

"அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்கின்றோம். இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷயம். முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் வெற்றிக்கான யுக்திகளை வகுத்திருந்தோம். ஆனால் அது கைகூடவில்லை. கடைசியில் 20 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் எங்களுக்கு புது பந்து வந்தது."

"அப்போது கூட எங்களால் வெற்றி பெற்று விட முடியும் என்றுதான் நாங்கள் யோசித்தோம். அதற்காக நாங்கள் கடுமையாக முயற்சி செய்தோம். கடைசி ரன்கள் அடிக்கும் வரை நாங்கள் போராட்ட குணத்தை வெளிப்படுத்தினோம். ஒவ்வொரு ரன்னுக்கும் இங்கிலாந்தை உழைக்க வைத்தோம்" என்று பிரசித் கிருஷ்ணா கூறினார்.

Story first published: Saturday, June 28, 2025, 19:49 [IST]
Other articles published on Jun 28, 2025
English summary
Ind vs Eng- Prasidh Krishna reveals Why He gave so much runs in First Test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+