Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இங்கிலாந்து அணிக்கு சாதகமாக செயல்படும் நடுவர்.. அஸ்வின் பரபரப்பு குற்றச்சாட்டு

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் தொடரில் கள நடுவர் பால் ரெய்பிள் மீது தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருக்கின்றார். லண்டன் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

இந்த கட்டத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 40 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் ஜோ ரூட் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, நடுவரின் உதவியால் அவர் காப்பாற்றப்பட்டார் என்ற குற்றச்சாட்டு இருந்தது.

R Ashwin on Paul Reiffel

முகம்மது சிராஜ் வீசிய பந்து ஒன்று ஜோ ரூட்டின் காலில் பட்டது. ஆனால் இதற்கு நடுவர் நாட் அவுட் வழங்கி விட்டார். இதற்கு டிஆர்எஸ் முடிவை இந்தியா எடுத்தது. அப்போது பந்து லேசாக ஸ்டெம்பை தாக்கியதாக கிராபிக்ஸில் கணிக்கப்பட்டிருந்தது. இதற்கு கள நடுவராக இருந்த பால் ரெயிபிள் நாட் அவுட் வழங்கியதால் இது நாட் அவுட் என்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஒருவேலை இதற்கு நடுவர் அவுட் வழங்கி இருந்தால், இது அவுட் ஆகி இருந்திருக்கும். இது குறித்து ஏற்கனவே அணில் கும்ப்ளே, தனது குற்றச்சாட்டை கூறியிருந்த நிலையில்,தற்போது அஸ்வினும் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று வைத்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் நடுவர் பால் ரெயிபிள் குறித்து நான் கண்டிப்பாக பேசியாக வேண்டும்.

இந்தியா எப்போதெல்லாம் பந்து வீசுகிறதோ அப்போதெல்லாம் அவர் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு நாட் அவுட் வழங்குவார். ஆனால் இந்தியா எப்போது எல்லாம் பேட்டிங் செய்கிறதோ, அப்போதெல்லாம் அவர் அவுட் வழங்குவார். இதன் மூலம் டி ஆர் எஸ் இல் நாம் ஸ்டெம்பில் பந்து லேசாகப்பட்டால் கூட அவுட் ஆகிவிடும்.

இந்தியாவுக்கு எதிராக அவர் தொடர்ந்து இவ்வாறு தான் செயல்படுகிறார். இது குறித்து ஐசிசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைக்கின்றேன். இதேபோன்று கில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பேட்டிற்கும் பாலிருக்கும் நிறைய கேப் இருந்தது. அந்த கேப்பில் என்னுடைய காரையை நிறுத்தி விடலாம். இது நாட் அவுட் என அனைவருக்கும் தெரியும்.

ஆனால் நடுவர் பால் ரெயிபிள் இதற்கு அவுட் வழங்கினார். என்னுடைய தந்தை இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கூட பால் ரெயிபிள் நடுவராக வந்தால் இந்தியா வெற்றி பெறுவது கடினம் என்றார். நாசர் ஹூசைன், மைக் அத்தர்ட்டன் போன்ற முன்னாள் வீரர்கள் கூட நடுவர்கள் கொஞ்சம் நேரத்தை வீணடிக்கும் வீரர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார்கள் என அஸ்வின் தெரிவித்தார்.

Story first published: Monday, July 14, 2025, 17:42 [IST]
Other articles published on Jul 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+