Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: பும்ரா, ஜாகீர் கான் போல் செயல்படுவார்.. சிஎஸ்கே வீரருக்காக குரல் கொடுத்த அஸ்வின்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள சிஎஸ்கே வீரர் அன்சூல் கம்போஜை அஸ்வின் புகழ்ந்து பேசி உள்ளார். 24 வயதான அன்சூல் காம்போஜ் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்தார்.

தற்போது இங்கிலாந்து அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அன்சூல், இந்திய அணியில் ஆகாஷ் தீப் மற்றும் ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் காயமடைந்துள்ள நிலையில், அன்சூல் காம்போஜ் இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார்.

R Ashwin on Anshul Kamboj

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின், "கம்போஜ் குறித்து பாராட்ட வேண்டும் என்றால் அவர் போட்டியில் உள்ள யுக்திகளை விரைவில் புரிந்து கொள்வார். நான் பல பவுலர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் 30, 40 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய பிறகும் என்ன திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமலே செயல்படுவார்கள்."

"அவர்களிடம் சென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாயா என்று கேட்டால், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை என்ஜாய் செய்கிறேன் என்று பதில் கூறுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு திட்டம் பற்றி ஒன்றுமே புரியாது. அது ஒரு விதமான பந்துவீச்சு. ஆனால் இன்னொரு விதமான பந்துவீச்சு இருக்கின்றது."

"அன்சூல் கம்போஜ் திட்டத்தை நன்றாக புரிந்து கொண்டு அதை எப்படி களத்தில் செயல்படுவது என்பதை புரிந்து கொள்ளும் வீரராக இருக்கின்றார். நான் அதை கண்கூடாக பார்த்திருக்கின்றேன். ஆனால் பல வேகப் பந்துவீச்சாளர்களுக்கு இந்த பழக்கம் கிடையாது. ஜாகிர் கான், பும்ரா போன்ற வீரர்கள் எல்லாம் திட்டத்தை சரியாக தீட்டி அதை களத்தில் செயல்படுத்துவார்கள்."

"அதை போன்று தான் அவர் வீரர்களுக்கு எதிராக திட்டத்தை தீட்டி அதை சரியாக களத்தில் வெளி காட்டுவார். இந்திய அணியின் பந்து வீச்சில் அன்சூல் காம்போஜ்,இணைந்து இருப்பதன் மூலம் கேப்டனுக்கு கூடுதலான வெரைட்டி கிடைத்திருக்கின்றது ஏற்கனவே பும்ரா, சிராஜ் ஆகியோர் அணியில் இருக்கும் நிலையில் நீங்கள் அன்சூல் கம்போஜை பிளேயிங் லெவனில் சேர்த்தால் நமது பந்துவீச்சு மிகவும் அபாயகரமாக மாறிவிடும்."

"அன்சூல் முதல் டெஸ்ட் விளையாடுகிறார் என்று பலரும் சொல்வார்கள். ஆனால் அவர் இந்திய ஏ அணிக்காக நிறைய டெஸ்ட் விளையாடி இருக்கின்றார். முதல் தரப் போட்டிகளில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் எல்லாம் வீழ்த்தி இருக்கின்றார். துலீப் கோப்பையில் நன்றாக செயல்பட்டிருக்கின்றார். தொடர்ந்து அதிக ஓவர்கள் வீச முடியும். இதுபோல் ஒரு பவுலர் இங்கிலாந்து மண்ணில் விளையாடும் போது தேவை. சிராஜ் பும்ராவுக்கு நல்ல துணையாக அன்சூல் காம்போஜ் இருப்பார்" என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, July 22, 2025, 15:08 [IST]
Other articles published on Jul 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+