Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG - இடிந்து போய் உட்கார்ந்த கோலி.. உடனே டிராவிட் செய்த செயல்.. தீயாய் பரவும் வீடியோ

கயானா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நட்சத்திர விராட் கோலி ஒன்பது ரன்களில் ஆட்டம் இழந்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

நடப்பு தொடரில் மிகவும் முக்கியமான நாக் அவுட் போட்டியாக கருதப்படும் அரையிறுதியில் விராட் கோலி நம்பி தான் இந்திய அணி இருந்தது. t20 உலக கோப்பை வரலாற்றில் விராட் கோலி அரை இறுதியில் இதுவரை அபாரமாக விளையாடி இருக்கிறார்.

t20 world cup ind vs eng virat kohli

ஆனால் இம்முறை கோலி சொதப்பி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. நடப்பு தொடரில் விராட் கோலி 7 போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 75 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதனால் தம்மால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்று விராட் கோலி சோகமாக அமர்ந்திருந்தார்.

பும்ரா,ஜடேஜா உடன் விராட் கோலி அமர்ந்த போது அங்கிருந்து டிராவிட் கவலைப்படாதீர்கள் என்பது போல் அவரை சமாதானப்படுத்த முயன்றார். டிராவிட்டின் இந்த பண்பு ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கிரிக்கெட்டில் எப்போதுமே ஒரு வீரர் சிறப்பாக விளையாட முடியாது. நல்ல நாட்கள் இருக்கும்போது களத்தில் தடுமாறும் நாட்களும் இருக்கும்.

இதனால் விராட் கோலி மனதளவில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ராகுல் டிராவிட் அவர் நன்றாக இருக்கிறாரா என்பது போல் நேரில் பார்த்தார். இந்த நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு சென்றால் நிச்சயம் விராட் கோலி பெரிய கோரை அடித்து அணியை காப்பாற்றுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.

விராட் கோலி இப்படி சோர்ந்து போய் அமர்ந்திருப்பதை பார்க்கும்போது மனது வலிப்பதாகவும், விராட் கோலி மீண்டும் தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக தான் விராட் கோலி அமைதி காப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

Story first published: Thursday, June 27, 2024, 23:02 [IST]
Other articles published on Jun 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+