Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG : 500 விக்கெட்டுகள்.. தமிழக வீரர் அஸ்வின் சாதனை.. கும்ப்ளே ரெக்கார்ட் முறியடிப்பு!

ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதையடுத்து இங்கிலாந்து அணி தரப்பில் கிராலி - டக்கெட் இருவரும் இணைந்து அதிரடியாக ரன்களை குவித்து வந்தனர். முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்த நிலையில், இந்திய அணி விக்கெட் வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

IND vs ENG : Ravichandran Ashwin becomes the 2nd Indian player to get 500 Wickets in Test Cricket

அப்போது அட்டாக்கில் வந்த அஸ்வின், அவர் வீசிய 2வது ஓவரின் முதல் பந்திலேயே கிராலியை 15 ரன்களில் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு முன் ஜாம்பவான் கிரிக்கெட்டரான அனில் கும்ப்ளே 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல் குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார் அஸ்வின்.

இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி படைத்த சாதனையை, அஸ்வின் 98 போட்டிகளில் விளையாடி படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் 87 போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 25,714 பந்துகளை வீசி 500 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியுள்ளார். இவருக்கு முன்பாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் கிளென் மெக்ராத் 25,528 பந்துகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 9வது இடத்தில் உள்ளார். இவருக்கு முன்பாக நேதன் லயன் இருக்கிறார். இந்த பட்டியலில் 800 விக்கெட்டுகளுடன் முரளிதரன் முதலிடத்திலும், 708 விக்கெட்டுகளுடன் வார்னே 2வது இடத்திலும், 696 விக்கெட்டுகளுடன் ஆண்டர்சன் 3வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 16, 2024, 15:21 [IST]
Other articles published on Feb 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+