Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

12வது முறை.. அடி வாங்குறதுக்குனே வந்துருக்காப்ல.. அஸ்வின் பந்தில் அவுட்டான ஸ்டோக்ஸ்.. ரெக்கார்ட் வேற

ஐதராபாத் : இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸை 12வது முறையாக வீழ்த்தி இந்திய அணியின் சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தின் முதல் செஷனிலேயே இந்திய அணி 436 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலமாக இந்திய அணி முதல் இன்னிங்ஸின் முடிவிலேயே 190 ரன்களை முன்னிலை பெற்றது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

IND vs ENG : Ravichandran Ashwin dismissed Ben Stokes again and this is the 12th time in Test Cricket

இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் கிராலி 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, டக்கெட் - போப் இருவரும் சேர்ந்து உணவு இடைவேளை வரை விக்கெட் கொடுக்காமல் ஆடினர். இதனால் இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் சேர்த்தது. இதன்பின் 2வது செஷன் ஆட்டம் தொடங்கிய நிலையில், பும்ரா வீசிய இன்-ஸ்விங்கரில் டக்கெட் 47 ரன்களில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த ரூட் 2 ரன்களிலும், பேர்ஸ்டோவ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 140 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. இதையடுத்து இளம் வீரர் போப் - பென் ஸ்டோக்ஸ் கூட்டணி இணைந்தது. பென் ஸ்டோக்ஸ் வந்தபின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உடனடியாக அஸ்வினை அட்டாக்கில் கொண்டு வந்தார்.

ஏனென்றால் பென் ஸ்டோக்ஸை ஏற்கனவே 11 முறை வீழ்த்தியிருக்கிறார் அஸ்வின். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு வீரர்களுமே எந்த ரிஸ்கும் எடுக்காமல் நிதானமாக விளையாடினர். இந்த நிலையில் அஸ்வின் கொஞ்சம் டாஸ் செய்து வீசிய பந்து பென் ஸ்டோக்ஸை ஏமாற்றி உள்ளே சென்று ஸ்டம்பில் அடித்தது. இதனால் பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் பென் ஸ்டோக்ஸ் 12வது முறையாக அஸ்வின் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இதுவரை அஸ்வின் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் 25 இன்னிங்ஸ்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் அஸ்வினுக்கு எதிராக 232 ரன்களை சேர்த்துள்ள பென் ஸ்டோக்ஸ், 12 முறை விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இதன் மூலம் ஒரே பேட்ஸ்மேனை அதிக முறை விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற கபில் தேவ்-ன் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார்.

ஒரே பேட்ஸ்மேனை அதிக முறை விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் முன்னாள் கேப்டன் கபில் தேவ் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முடாஸர் நசரை 12 முறை வீழ்த்தி இருக்கிறார். அதன்பின் அஸ்வின் 12 முறை பென் ஸ்டோக்ஸை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதேபோல் அலைஸ்டர் குக்கை 11 முறை இஷாந்த் சர்மா வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, January 27, 2024, 14:22 [IST]
Other articles published on Jan 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+